விசயராகவன்
நாராயணபிள்ளை விசயராகவன் ( Narayanapillai Vijayaraghavan; பிறப்பு 12 சனவரி 1950), பொதுவாக விசயராகவன் என்று அறியப்பட்ட இவர், முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் குணச்சித்திர வேடங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் நாடகக் கலைஞரும் மற்றும் திரைப்பட நடிகருமான என். என். பிள்ளையின் மகன். சொந்த வாழ்க்கைவிசயராகவன் பழம்பெரும் நடிகர் என். என். பிள்ளை மற்றும் சின்னம்மா ஆகியோருக்கு மகனாக 12 சனவரி 1950 இல் மலாயா கூட்டமைப்பின் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்தார்.[1] இவரது தந்தை தோட்ட மேலாளராக பணிபுரிந்தார். இவருக்கு சுலோச்சனா மற்றும் ரேணுகா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவர் கூடமாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கைஇவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் ஜினதேவன் ஒரு தொழிலதிபராக இருக்கிறார். இளைய மகன் தேவதேவன் திரைத்துறையில் உள்ளார். திரைத் தொழில்விசயராகவன், ஆர். கே. சேகர் இயக்கத்தில்[2][3][4] 1973இல் வெளிவந்தகபாலிகா என்ற மலையாளத் திரைப்ப்டம் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 1975இல் இயக்குநர் ஜே. சசிகுமார் இயக்கத்தில் பிக்னிக் படத்தில் தோன்றினார்.[5][6][7] தமிழ்த் திரைப்படங்கள்பிரபல மலையாள இயக்குநர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படமான அரங்கேற்ற வேளை படத்திலும்[8][9] அதைத்தொடர்ந்து இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2017 இல் வெளியான பைரவா படத்திலும் நடித்திருந்தார்.[10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia