பைரவா (திரைப்படம்)
பைரவா (Bairavaa) விஜய் நடிப்பில் 2017 சனவரியில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடித் திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். விஜயா புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சதீஸ், ஜெகபதி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது நடிகர் விஜய் நடிக்கும் 60ஆவது படமாதலால் முன்னதாக விஜய் 60 என்று அறியப்பட்டு, பின்னர் 2016 செப்டம்பரில் “பைரவா” எனப் பெயரிடப்பட்டது.[1] இப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை சுமார் 100 கோடி வரை வியாபாரம் செய்தனர். நடிகர்கள்
விநியோகம்நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தின் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமையை ₹22 கோடி (ஐஅ$2.6 மில்லியன்) அளவிற்கு வாங்கியுள்ளார். இத்தொகையானது விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான தெறி திரைப்படத்தை விட மிக அதிகமாகும்.[2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia