விசுவா வர்ணபால
பேராசிரியர் விசுவா வர்ணபால (Wiswa Warnapala, 26 டிசம்பர் 1936 – 27 பெப்ரவரி 2016) இலங்கை அரசியல்வாதியும், கல்விமானும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] வாழ்க்கைக் குறிப்பு1936 ஆம் ஆண்டில் பிறந்த வர்ணபால பொருளியலில் இளங்கலை சிறப்புப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 ஆம் ஆண்டில் பெற்றார்.[2] 1967 இல் அமெரிக்காவில் பிட்சுபர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும், 1970 இல் இங்கிலாந்து லீட்சு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றார்.[2] இவர் பேராதனைப் பல்கலைக்க்ழகத்தில் அரசறிவியலில் பேராசிரியராகவும், அரசறிவியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.[2] அரசியலில்பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்திலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டார் வர்ணபால. 1980 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார். இவர் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராகவும்,[2] பின்னர் 2007 முதல் 2010 வரை மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார்.[1] 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் புதிய அரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட்டார். அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக 2015 ஆகத்து மாதத்தில் நியமிக்கப்பட்ட்டார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia