விஜயகரிசல்குளம்

விஜயகரிசல்குளம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

விஜயகரிசல்குளம் என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமத்தில் தீப்பெட்டி உற்பத்தியை குடிசைத்தொழிலாக செய்கின்றனர்.

அமைவிடம்

விஜயகரிசல்குளம், மாவட்டத் தலைமையிடமான விருதுநகரிலிருந்து தென்மேற்கே 42.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; தாலுகா தலைமையிடமான வெம்பக்கோட்டைக்கு வடகிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, விஜயகரிசல்குளம் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3,981 ஆகும். அதில் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்கள் 298 ஆக உள்ளனர்.[1]

தொல்லியல் அகழாய்வு

விஜயகரிசல்குளத்தில் தமிழ்நாடு அரசு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு பணி மேற்கொண்டு வருகிறது. [2][3][4]மூன்றாம் கட்ட அகழாய்வின் போது சூன் 2024ல் சுடுமண்ணால் ஆன பெண் தலை பொம்மை கண்டெடுக்கப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya