விடிவி கணேஷ்
விடிவி கணேஷ் (விடிவி கணேஷ்) என்றறியப்படும் கணேஷ் ஜனார்தனன், திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் தனது தனது கரகரப்பான குரலாலும் [1] சிலம்பரசனுடன் நடித்த திரைப்படங்களாலும் நன்கு அறியப்படுகிறார்.[2] தான் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். காக்க காக்க திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தோற்றத்தில் தோன்றிய அவருக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தனது தயாரிப்பு நிறுவனமான விடிவி என்பதை பெயரின் அடைமொழியாக இணைத்துக் கொண்டார். வானம் திரைப்படம் வழியாக “பஜனை” கணேஷ் என்னும் பாத்திரத்தில் சிலம்பரசனுடன் மீண்டும் இணைந்தார்.[3] கணேஷ், சிம்புவின் ஒஸ்தி திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 2013-ம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.[4] நடிகராக நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia