விதிசா மக்களவைத் தொகுதி
விதிஷா மக்களவைத் தொகுதி (Vidisha Lok Sabha constituency) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்த 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 1967 முதல் உள்ளது. இத்தொகுதி விதிஷா மாவட்டம், ராய்சேன் மாவட்டம் மற்றும் செஹோர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. இந்த மக்களவைத் தொகுதி 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அவைகள்: விதிஷா சட்டமன்றத் தொகுதி, போஜ்பூர் சட்டமன்றத் தொகுதி, சாஞ்சி சட்டமன்றத் தொகுதி, சில்வானி சட்டமன்றத் தொகுதி, பசோடா சட்டமன்றத் தொகுதி, புத்னி சட்டமன்றத் தொகுதி, இச்சாவர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கதேகான் சட்டமன்றத் தொகுதி ஆகும். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணி & இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் நிறுவனரான ராம்நாத் கோயங்கா இத்தொகுதிலிருந்து வெற்றி பெற்றவர் ஆவார். விதிஷா மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia