வித்தகன்
வித்தகன் (Vithagan) 2011 ஆம் ஆண்டு ஆர். பார்த்திபன் இயக்கி நடித்த தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும், இதில் பார்த்திபனுடன் பூர்ணா இணைந்து நடித்தார். 2008-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் படம், 2011 நவம்பர் 18 இல் வெளியிடப்பட்டது. பார்த்திபனின் 50-ஆம் படமான இந்தப் படத்தில், அவர் புத்திசாலியாகவும், துணிச்சலாகவும் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கதைச் சுருக்கம்ரௌத்திரன் (ஆர். பார்த்திபன்) ஒரு நேர்மையான காவல் அதிகாரி, இவர் சமூகத்தின் மோசடிகளை மட்டுமல்லாமல், குண்டர்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கும் அவரது மூத்த அதிகாரிகளையும் எதிர்த்துப் போராடுகிறார். இதற்காக, இவர் சட்டத்தைத் தனது கைகளில் எடுத்து, காவல்துறைக் கோப்புகளில் தேடப்படும் குற்றவாளிகளை, கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் வழியாகக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். நடிகர்கள்
தயாரிப்புபார்த்திபனது கடைசி முயற்சியான பச்சக் குதிரை வணிக ரீதியாக வெற்றி பெறாத இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பார்த்திபன் அடுத்த இயக்கத்தை 2008 இல் வித்தகன் என்ற தலைப்பிலான திரைப்படத்திற்காகத் தொடங்கி, அத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்தார். இக்கதாபாத்திரம் ஒரு புத்திசாலியான, தந்திரமான காவல் துறை துணை ஆணையரைச் சித்தரிக்கும் கதாபாத்திரம் ஆகும்.[1][2] மேலும், இத்திரைப்படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதாகவும் இவர் கூறினார்.[3] கதாநாயகியாக மெர்சி என்ற கிறித்தவப் பெண்ணாக பூர்ணா நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] கடைசியாக பையா படத்தில் நடித்த இந்தி நடிகர் மிலிந்த் சோமன் வில்லன் கதபாத்திரத்திற்காக உறுதி செய்யப்பட்டார்.[4] அக்டோபர் 2010 இல், இயக்குநர்-தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன் மிலிந்த் சோமனுக்கு குரல் கொடுப்பார் என்று செய்திகள் கூறின.[5] பார்த்திபனின் மகன் ராதாகிருஷ்ணன் (ராக்கி) ஒரு பாடல் காட்சியின் போது ஒரு நிமிட சிறப்பு வேடத்தில் தோன்றுவார்.[6][7] வடிவேலு இந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால், அது இறுதியில் நிறைவேறவில்லை.[8] ஜோஷுவா ஸ்ரீதர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், எம். எஸ். பிரபு ஒளிப்பதிவாளராகவும், நளினி ஸ்ரீராம் ஆடை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள 18 மாடி கட்டிடத்தில் ஒரு பங்களா செட் கட்டப்பட்டது, அதே போல இறுதி சண்டைக் காட்சியைப் படமாக்க வேண்டிய சிறு விமானம் இறங்கு தளம் கட்டப்பட்டது.[9] படத்தின் சில பகுதிகள் வியன்னா, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசில் படமாக்கப்பட்டன.[10] ஒலிப்பதிவுபாடல்களுக்கு ஜோஷுவா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். பார்த்திபன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் .[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia