இரவின் நிழல்
இரவின் நிழல் என்பது ஜுலை 15 இல் வெளியான இந்திய தமிழ் மொழி பரபரப்பூட்டும் அதிரடிச் சுயாதீனத் திரைப்படம் ஆகும். இதில் அகிரா புரொடக்க்ஷன்ஸ் மற்றும் பயோஸ்க்கோப் பிள்ம் புரேமர்ஸ் ஆகியப் பதாகையின் கீழே இரா. பார்த்திபன் தயாரித்து, எழுதி, துணைத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இதில் இராதாக்கிருஷ்ணன் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபா சங்கர், பிரியங்கா ருத் மற்றும் பிரிகிதா சாகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பன்னணி இசை ஏ. ஆர். ரகுமானால் இசையமைக்கப்பட்டு ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது. இப்படம் முதல் ஆசிய ஒற்றைப்பிடிப்புத் திரைப்படத்திற்காக ஆசியச் சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.[1] உலகின் முதல் நேரியிலற்ற ஒற்றைப்பிடிப்புத் திரைப்படமென்றும் முதல் ஆசிய ஒற்றைப்பிடிப்புத் திரைப்படமென்றும் பெருமிதம்கொள்ளப்பட்டது. தொகுப்பாளரின்றி படைக்கப்பட்ட முதல் ஆசியத் திரைப்படமெனவும் கருதப்படுகிறது. இத்திரைப்படம் கான் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு முன்மொழிந்து அனுப்பப்பட்ட திரைப்படங்களுள் ஒன்றாகும். நடிகர்கள்
சந்தைப்படுத்தல்படக்குழுவினர் தனிமையானச் சாலையில் இரவு வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதை குறிக்கும் வண்ணமமைந்த திரைப்படத்திலிருந்து குறுங் காணொளியை பிப்ரவரி 2, 2022 அன்று வெளியிட்டனர். மார்ச் 19, 2022 அன்று மூத்த இயக்குநர் மணி ரத்னம் முதற்பார்வை சுவரொட்டியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். பிறகு மெட்ரால் டாக்கீஸும் டுவிட்டரில் வெளியிடுகின்றனர்.[2][3] திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் தூண்டோட்டம்(teaser) யூடியூபில் மே நாளை முன்னிட்டு மே 1, 2022 அன்று வெளியானது.[4] இசைதிரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் வெற்றிப்பாடல்களாக இல்லாமல் பசுமைப்பாடல்களாக நிரம்பிய பாடல் தொகுப்பைப் படைக்குமாறு ரகுமானிடம் கேட்டுக்கொண்டதாகப் பார்த்திபனே கூறினார்.[5] அதிகாரப்பூர்வ இசை வெளியீட்டு விழா சென்னையில் சூன் 5, 2022 அன்று அபிஷேக் பச்சன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடந்தது மற்றும் திரைப்படத்திலிருந்து ஒற்றைப்பாடல் வெளியீடு(single release) ஏ. ஆர். ரஹ்மான் முன்னிலையில் சர்வதேச தொழிலாளர் நாளை முன்னிட்டு மே 1, 2022 அன்று வெளியானது.[6][7] தமிழ்
தெலுங்கு
வரவேற்புஇத்திரைப்படத்தைத் தமிழ்த் திரையுலகின் கலங்கரைவிளக்கம் என்று அழைத்துப் பாராட்டைக் குவித்தார் இயக்குநர் சீனு இராமசாமி.[8] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia