வித்யாசங்கரா கோயில்

சிருங்கேரி வித்தியாசங்கரர் கோவில்

வித்யாசங்கரா கோயில் (Vidyashankara temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி எனும் ஊரில் துங்கா ஆற்றின் கரையில் உள்ளது. இக்கோயில் போசாளப் பேரரசர்களால் போசளர் கட்டிடக்கலையில் 1338ம் ஆண்டில் கட்டப்பட்டது.

அமைவிடம்

இக்கோயில் சிக்கமகளூருக்கு மேற்கே 85.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; பெங்களூருக்கு வடமேற்கே 318.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; உடுப்பிக்கு கிழக்கில் 173.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

கட்டிடக் கலை

போசாளப் பேரரசர்களால் சிருங்கேரி சாரதா மடத்தின் அத்வைத குருவான வித்தியாசங்கரரின் சமாதியில் 1338ல் நிறுவப்பட்ட இந்த அழகிய கோயில் தேர் வடிவில் போசளர் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டது. இக்கோயில் ஆறு வாசலகள் கொண்டது. இக்கோயிலில் சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான சிலை உள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya