வினீத் கோத்தாரி
வினீத் கோத்தாரி (Vineet Kothari)(பிறப்பு: செப்டம்பர் 2, 1959) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆவார். இவர் மதராசு உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம் மற்றும் இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார்.[1] கல்விபட்டய கணக்காளர்களின் சைனக் குடும்பத்தில் பிறந்தவர் கோத்தாரி.[2] சோத்பூர் பலகலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். 26 ஆண்டுகளாகப் பட்டய கணக்காளராகப் பயிற்சி பிறகு, இவர் தனித்துவத்துடன் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் 15 ஆண்டுகளாக (1989 முதல் 2004 வரை) பணியாற்றினார். இவருடைய அண்ணன் திரு. பி. எம். கோத்தாரி வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் உறுப்பினராக இருந்தார். நீதிபதி பணிகோத்தாரி 13 ஜூன் 2005 அன்று இராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். ஏப்ரல் 18, 2016 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். நவம்பர் 23, 2018 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். 4 ஜனவரி 2021 அன்று குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதியாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் 31 ஆகத்து 2021 நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக பணியாற்றிய விக்ரம் நாத் இந்திய உச்ச நீதிமன்றம் நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் இவர் இந்தப் பொறுப்பினை ஏற்றார். பின்னர் கோத்தார் செப்டம்பர் 1, 2021 அன்று வயது மூப்பின் காரணமாகப் பணி ஓய்வு பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia