விப்பிள் நோய்
விப்பிள் நோய் (Whipple's disease) என்பது துரோபெரைமா விப்ளெய் எனும் பாக்டீரியாவினால் ஏற்படும் உடற்தொகுதி நோயாகும். சோர்ச் ஒய்ட் விப்பிள் 1907 இல் இதனை முதன்முதலில் கண்டறிந்தபோது இது சிறுகுடலில் உணவு அகத்துறிஞ்சாமையை ஏற்படுத்தும் இரையகக் குடலியநோய் என்று கருதினர். எனினும், மூட்டுக்கள், மைய நரம்புத் தொகுதி, குருதிச் சுற்றோட்டத் தொகுதி, நுரையீரல் தொகுதி போன்ற வேறு ஒருங்கியங்களையும் இந்நோய் பாதிக்கின்றது எனப் பின்னர் அறியப்பட்டது.[1] எடை குறைதல், வயிற்றோட்டம், மூட்டுவலி முதலியன பொதுவான முதன்மை அறிகுறிகளாகும். [2] விப்பிள் நோய் ஆண்களில் ஏற்படும் விழுக்காடு அதிகமாக உள்ளது. நோயாளிகளில் 87% ஆண்களாவர். [3]பொதுவாக இந்நோய் நீண்ட நாட்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படலாம். நோய் அறிகுறிகள்விப்பிள் நோய்க்குரிய பொதுவான அறிகுறிகள்[4]:
ஒரு குறிப்பிட்ட மூட்டில் உருவாகும் மூட்டுவலி வேறு மூட்டுகளுக்கு இடம் பெயரும். எடுத்துக்காட்டாக, தோள்மூட்டில் வலி என்று தெரிவிக்கும் நோயாளி மறுதடவை முழங்காலில் வலி என்று தெரிவிக்கக்கூடும். ஞாபக மறதி ஏற்படல் தாமதித்து ஏற்படும் அறிகுறியாகும், இது உண்டாவது நோய் குணமாகும்தன்மை குறைவதைக் காட்டுகின்றது.[4] உணவு அகத்துறிஞ்சாமைக்குரிய அறிகுறிகள் இந்நோயில் காணப்படும். இவ்வகையான சில அறிகுறிகள்[5]: அறுதியிடல்நோய் அறிகுறிகள் மற்றும் அகநோக்கி உயிரகச்செதுக்கு ஆய்வு மூலம் அறுதியிடல் மேற்கொள்ளப்படுகின்றது. சிகிச்சைவிப்பிள் நோய்க்குரிய சிகிச்சை நீண்டகால நுண்ணுயிர் கொல்லி மருந்துகளாகும். முதலில் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு சிரைவழி (அ. நாளவழி) செப்திரியக்சோன் அல்லது பெனிசிலின், அதைத்தொடர்ந்து ஒரு அல்லது இரண்டு வருடங்களுக்கு கோ-திரிமொக்சாசோல் (பக்ட்ரிம்) கொடுக்கப்படுகின்றது. குறைவான காலத்துக்கு நுண்ணுயிர் கொல்லி வழங்கப்பட்டால் இந்நோய் மீளவும் தோன்ற வாய்ப்புள்ளது. [6] உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia