ஈரல் வாயினாள மிகையழுத்தம்
ஈரல் வாயினாள மிகையழுத்தம் (Portal hypertension) என்பது ஈரல் வாயில் நாளம் மற்றும் மண்ணீரல் நாளம், மேற்குடல் நடுமடிப்பு நாளம் போன்ற சமிபாட்டுத்தொகுதி சிரைகள் அடங்கிய ஈரல் வாயில் நாளத் தொகுதியில் மிகையாக ஏற்படும் குருதி அழுத்தமாகும். ஈரல் வாயில் நாளம் மற்றும் கீழ்ப் பெருநாளம் ஆகியனவற்றிற்கு இடையேயான அழுத்த மாறல் விகிதம் ஐந்திற்கும் கூடுதலாக (≥5 mmHg) உள்ள பட்சத்தில் ஈரல் வாயினாள மிகையழுத்தம் ஏற்படுகின்றது.[1] இதனால் நீர்க்கோவை, இரையகக் குடலிய குருதிப்போக்கு, கல்லீரல்நோய் மூளைக்கோளாறு, குருதி உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவடைதல் என்பன உருவாகின்றன. காரணிகள்ஈரல் வாயினாள மிகையழுத்தம் உருவாகக் காரணமான பொதுவான உடல்நலக்குறைவு கல்லீரல் இழைநார் வளர்ச்சியாகும். ஈரல் வாயில் நாளத் தொகுதியின் அழுத்தம் குழலியத் தடை (Vascular resistance) மற்றும் குருதிப்பாய்ம ஓட்டம் என்பனவற்றால் தீர்மானிக்கப்படுகின்றது.[1] குழலியத் தடை அதிகரிப்பதால் அல்லது குருதிப்பாய்ம ஓட்டக்கொள்ளளவு அதிகரிப்பதால் ஈரல் வாயினாள மிகையழுத்தம் ஏற்படலாம். ஆனால், கல்லீரல் மிகையாக குருதியைச் சேகரிக்கும் ஆற்றல் கொண்டதால் குருதிப்பாய்ம ஓட்டக்கொள்ளளவு அதிகரிப்பதால் ஏற்படும் மிகையழுத்தம் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. குழலியத் தடை கல்லீரல் முற்பகுதியில் குருதியைக் கொண்டுவரும் ஈரல் வாயில் நாளத் தொகுதியில் ஏற்படுவதுடன் கல்லீரலிலும் அல்லது கல்லீரலின் பிற்பகுதியிலும் ஏற்படலாம். கல்லீரல் முற்பகுதியில் ஏற்படும் குழலியத் தடை
கல்லீரல் பகுதியில் ஏற்படும் குழலியத் தடை
கல்லீரல் பிற்பகுதியில் ஏற்படும் குழலியத் தடை
நோய் அறிகுறிகள்பின்வரும் நோய் அறிகுறிகள் ஈரல் வாயினாள மிகையழுத்தத்தில் ஏற்படலாம்.
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia