இரைப்பைக் குடலழற்சி நச்சுயிரிகள்: A = rotavirus, B = adenovirus, C = norovirus and D = astrovirus. உருவளவு ஒப்பீட்டுக்காக அனைத்து நச்சுயிரித் துகள்களும் ஒரே உருப்பெருக்கத்தில் காட்டப்பட்டுள்ளன.
இரைப்பைக் குடலழற்சி(Gastroenteritis), அல்லது தொற்றுவழி வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி என்பது வயிறு, சிறு குடல் ஆகிய இரண்டுடனும் தொடர்பு கொண்ட இரைப்பைத் தடவழி அழற்சியாகும் ஆகும்.[8] இதன் அறிகுறிகளாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி ஆகியன அமையலாம்.[1] இதனால், காய்ச்சல், சத்தின்மை, நீரிழப்பு கூட ஏற்படலாம்.[2][3] இந்நோய் இயல்பாக
இருவாரங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும்.[8] இது ஐக்கிய அமெரிக்காவில் "வயிற்றுக்காய்ச்சல்" எனப்பட்டாலும், இது குளிர்காய்ச்சல் அன்று.[9]
இரைப்பைக் குடலழற்சி வழக்கமாக நச்சுயிரிகளால் ஏற்படுகிறது;[4] என்றாலும், வயிற்றுக் குச்சுயிரிகள், ஒட்டுண்ணிகள் பூஞ்சைகள் கூட இரைப்பைக் குடலழற்சியை உருவாக்கலாம்.[2][4] குழந்தைகளில் கடும் இரைப்பைக் குடலழற்சியை உருவாக்கும் மிகப் பொதுக்காரணியாக, சுருள்நச்சுயிரி அமைகிறது.[10].அகவை முதிர்ந்தோரில் இந்நோய், நோரோநச்சுயிரியாலும் காம்பைலோபாக்ட்டர் எனும் குச்சுயிரியாலும் பொதுவாக ஏற்படுகிறது.[11][12] சரியாக சமைக்காத உணவை உண்ணுதல், மாசுற்ற நீரைக் குடித்தல், இத்தொற்றால் நோயுற்றவருடன் நெருங்கிப் பழகுதல் ஆகிய செயல்பாடுகளால் நோய் பரவும்.[2] மருத்துவம் பொதுவாக நோயறிதலைச் சார்ந்திராததால், மருத்துவ ஓர்வுகள் ஏதும் வேண்டியதில்லை.[2] ஏழைநாட்டு இளங்குழந்தைகளுக்கு நோயைத் தடுக்க, சவர்க்காரத்தால் கையைக் கழுவல், காய்ச்சிவடித்த நீரைக் குடித்தல், குழந்தைகளுக்கு முலைப்பாலூட்டல் இவற்றோடு,[2] மாந்தக் கழிவுகளை முறையாக வெளியேற்றல் போன்ற நடைமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய்தணிக்க, சுருள்நச்சுயிரி ஊசி போடல் பரிந்துரைக்கப்படுகிறது.[2][10] போதுமான நீர்மங்கள் ஊட்டியும் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.[2] மிதமான இடைநிலை நேர்வுகளில் வாய்வழி நீரூட்டத்தால் (நீர், உப்பு,சருக்கரைக் கரைசலால்) நோயைத் தீர்க்கலாம்.[2] In those who are breastfed, continued breastfeeding is recommended.[2] கடும் நோய் நேர்வுகளில் சிரையூடு நீர்மம் செலுத்தப்படலாம்.[2] இந்த நீர்மங்கள் மூக்கூடான குழல்வழி வயிற்றுக்குச் செலுத்தப்படலாம்.[13] குழந்தைகளுக்கு துத்தநாக நிரப்பூட்டமும் பரிந்துரைக்கப்படுகிறது.[2] பொதுவாக, உயிர்கொல்லி மருந்துகள் தேவைப்படுவதில்லை.[14] என்றாலும், காய்ச்சலும் குருதி வயிற்றுப் போக்கும் உள்ள குழந்தைகளுக்கு உயிர்கொல்லி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.[1]
இது ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாசடைந்த உணவு, நீரின்வழி பரவுகிறது. உலகெங்கும், இரைப்பைக் குடலழற்சிக்குச் சரியான மருத்துவம் கிடைக்கப் பெறாததால் ஒவ்வோர் ஆண்டும்[15] ஐந்திலிருந்து எட்டு மில்லியன் மக்கள் வரை உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளும் சிறார்களும் இறந்துபட இதுவே முதன்மையான காரணமாக உள்ளது.[16]
முதன்மையான பிற நச்சுயிரிகளில் அண்ணீரக நச்சுயிரி, உடுவுரு நச்சுயிரி ஆகியவையும் அடங்கும்.
இரப்பைக் குடலழற்சி 2015 இல் இரண்டு பில்லியன் பேருக்கு ஏற்பட்டு, அவர்களில் 1.3 மில்லியன் பேர் உலகளாவியநிலையில் இறந்துள்ளனர்.[6][7] இந்தத் தொற்றால் வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளே பேரளவில் தாக்கப்படுகின்றனர்.[17] ஐந்து அகவைக்கும் குறைவான குழந்தைகளில், 2011 இல் கிட்டதட்ட 1.7 பில்லியன் தொற்றுகள் ஏற்பட்டு, அவர்களில் ஏறத்தாழ 700,000 இறப்புகள் ஏற்பட்டன.[18] வளரும் நாடுகளில், இரண்டு அகவைக்கும் குறைவான குழந்தைகளில் ஓராண்டில் அடிக்கடி ஆறுதடவை அல்லது அதற்கும் மேலாக தொற்று ஏற்படுகிறது.[19] நோயெதிர்ப்புத்திறன் வளர்ச்சியால், அகவை முதிர்ந்தோரில் அவ்வளவு பரவலாக ஏற்படுவதில்லை.[20]
கலைச்சொல்லியல்
"இரைப்பைக் குடலழற்சி" எனும் சொல் முதலில் 1825 இல் பயன்படுத்தப்பட்டது.[21]
இதற்கு முன்பு இது பொதுவாக என்புமெலிவு நோய்க் காய்ச்சல் அல்லது "காலரா மார்பசு" என வழங்கப்பட்டது. இது ஓரளவு "வயிற்று இறுக்கம்", "முகுநிலை", "குருதி கழிச்சல்", "பெருங்குடல் வலி", "வயிற்றுச் சிக்கல்" அல்லது கடும் வயிற்றுப்போக்குக்கான பல பழைய பெயர்களில் ஒன்றாலும் வழங்கப்பட்டது.[22] வெறும் காலரா என்பதை விட, காலரா மார்பசு என்ற வரலாற்றுச் சொல்லே பெரிதும் பயன்படுத்தப்பட்டது.[23]
நோய்க்குறிகளும் அறிகுறிகளும்
பிரிசுட்டல் மல அட்டவணை
இரைப்பைக் குடலழற்சியால் வாந்தியும் வயிற்றுப்போக்கும் நிகழும்.[20] சிலவேளைகளில் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் ஏற்படலாம்.[1] வயிற்றுத் தசைப்பிடிப்புகளும் ஏற்படலாம்.[1] தொற்று ஏற்பட்ட 12–72 மணிகளில் அறிகுறிகள் தோன்றலாம்.[17] தொற்று நச்சுயிரியால் ஏற்பட்டால் ஒரு வாரத்துக்குள் அறிகுறிகள் தோன்றும்.[20] சில நச்சுயிரித் தொற்றுகளால் காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசை வலி ஆகியன வரலாம்.[20] வயிற்றுப்போகில் குருதி கசிந்தால் அதற்கான காரணம் நச்சுயிரியாகவோ[20] அதைவிடக் கூடுதலாக குச்சுயிரியாகவோ இருக்கலாம்.[24] சில குச்சுயிரித் தொற்றுகளால் கடும் வயிற்றுவலி உருவாகிப் பல வாரங்களுக்குத் தொடரலாம்.[24]
சுருள்நச்சுயிரித் தொற்றுள்ள குழந்தைகள் மூன்று முதல் எட்டு நாட்களில் நோயில் இருந்து மீளலாம்.[25] என்றாலும், ஏழைநாடுகளில் கடுந்தொற்றுக்கு மருத்துவம் உடனடியாக கிடைக்கப் பெறாமல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு நீடிக்கிறது.[26] வயிற்றுப்போக்கால் நீர்வறட்சி பொதுவான சிக்கலாக இருக்கும்.[27] அழுத்தும்போது தோல்நிறமும் இருப்பும் மெதுவாக மீண்டால் குழந்தைகளில் கடும் நீரிறக்கம் உள்ளமையை உணரலாம்.[28] இது "நீடுதிற நுண்புழை மீள்நிரப்பு", "மெலிநிலை தோல் வறட்சி அல்லது நீரிழப்பு" எனப்படுகிறது.[28] இந்நிலை இயல்பிகந்த மூச்சுயிர்ப்பு, நீரிழப்புக்கான அறிகுறியே ஆகும்.[28] துப்புரவும் நல்ல ஊட்டமும் போதாதபோது தொற்றுகள் அடிக்கடி மீள்கின்றன.[17] வளர்ச்சிக் குன்றலும் நெடுநேர அறிதல் திறன் தாழ்த்தமும் ஏற்படலாம்.[19]
கம்பைலோபாக்ட்டர் குச்சுயிரி இனத் தொற்றுள்ளவரில் 1% பேருக்கு மீளெதிர்வு முடக்க நோய் உருவாகிறது.[24] 0.1% பேருக்குக் குவில்லைன் - பாரே நோய்த்தொகை உருவாகிறது.[24] ஈ. கோலி, சிகெல்லா குச்சுயிரி இனங்கள் சிகா நச்சுத் தொற்றைத் தோற்றுவித்து குருதிச் சிதைவு யூரியாமிகை நோய்த்தொகையைத் தரவல்லனவாக உள்ளன.[29] குருதிச் சிதைவு யூரியாமிகை நோய்த்தொகை தாழ்குருதித் தட்ட எண்ணிக்கைகள், சிறுநீரகச் செயலிழப்பு, தாழ் குருதிக்கல எண்ணிக்கை போன்றவற்றை உருவாக்குகிறது.[29] குழந்தைகள் அகவை முதிர்ந்தோரை விட குருதிச் சிதைவு யூரியாமிகை நோய்த்தொகைக்கு ஆட்படுகின்றனர்.[19] சில நச்சுயிரித் தொற்றுகள் குழந்தைகளுக்கு தீங்கற்ற காற்கை வலிப்புகளை உருவாக்குகின்றன.[1]
காரணங்கள்
இரைப்பைக் குடலழற்சிக்கான முதன்மைக் காரணங்களாக, நச்சுயிரிகளும் (குறிப்பாக, சிறுவர்களில் சுருள்நச்சுயிரியும் பெரியவர்களில் நோரோநச்சுயிரியும்) ஈ. கோலி, கம்பைலோபாக்ட்டர் போன்ற குச்சுயிரிகளும் அமைகின்றன.[17][30] மேலும், பிற காரணிகளாக ஒட்டுண்ணிகளும் பூஞ்சைகளும் கூட, தொற்றைத் தருவதுண்டு.[19][4]
நச்சுயிரிவழித் தொற்று
சுருள்நச்சுயிரிகள், நோரோநச்சுயிரிகள், அண்னீரக நச்சுயிரிகள், உடுவுரு நச்சுயிரிகள் ஆகியன நச்சுயிரிவழி இரைப்பைக் குடலழற்சியை உருவாக்கும் முதன்மைக் காரணிகளாக அமைகின்றன.[31] சுருள்நச்சுயிரிகள் தாம் குழந்தைகளில் இரைப்பைக் குடலழற்சியை உருவாக்கும் மிகப் பொதுவான காரணியாக உள்ளது;[30] இது வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் ஒரே வீதத்தில் இந்நோயை உருவாக்குகிறது.[25] Viruses cause about 70% of episodes of infectious diarrhea in the pediatric age group.[13] பெரியவர்களில் நோயெதிர்திறம் கூடுதலாக உள்ளமையால், சுருள்நச்சுயிரி அவ்வளவு பொதுவான காரணியாக அமைவதில்லை.[32] அனைத்து நோய் நேர்வுகளில் 18% பேருக்கு நோரோநச்சுயிரி நோயை உருவாக்கும் காரணியாக அமைகிறது.[33] பொதுவாக, வளர்ந்த நாடுகளில் உருவாகும் தொற்றுவழி வயிற்றுப்போக்கு நேர்வுகளில் நச்சுயிரிவழி இரைப்பைக் குடலழற்சி 21–40% அளவில் அமைகிறது.[34]
அமெரிக்காவில் பெரியவர்களுக்கான இரைப்பைக் குடலழற்சி நேர்வுகளில் 90% பேருக்கு நோயை உருவாக்கும் முதன்மைக் காரணியாக நோரோநச்சுயிரியே அமைகிறது.[20] இவ்வகை நோய் நேர்வுகள் மக்கள் மிக நெருக்கமாக நேரம் செலவிடும் படைத்துறைக் கலங்களிலும்[20] மருத்துவமனைகளிலும் அல்லது தங்குவிடுதிகளிலும் அமைகிறது.[1] வயிற்றுப்போக்கு முடிவுற்ற பிறகும் தொற்று நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது.[20] Norovirus is the cause of about 10% of cases in children.[1]
குச்சுயிரிவழித் தொற்று
கிராம் கறையூட்டிய பிறகான, 1000 மடங்கு உருப்பெருக்கம் உள்ள நுண்ணோக்கியில் காணும் சால்மொனெல்லா என்ட்டெரிக்கா செரோவர் டைப்பிமுரியம் (ATCC 14028)
சில நாடுகளில், காம்பைலோபாக்ட்டர் ஜேஜுனியே குச்சுயிரிவழி இரைப்பைக் குடலழற்சித் தொற்றுக்கு முதன்மைக் காரணியாக உள்ளது; இதில் பாதிபேர் கோழிவளர்ப்பில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.[24]குழந்தைகளில், 15% தொற்று நேர்வுகளுக்குக் குச்சுயிரியே காரணியாக அமைகிறது; இதற்கு, மிகப் பொதுவான காரணியாக ஈ. கோலி, சால்மொனெல்லா, சிகெல்லா, காம்பைலோபாக்ட்டர் ஆகிய இனங்களே அமைகின்றன.[13] குச்சுயிரி மாசுற்ற உணவு அறை வெப்பநிலையில் பல மணிநேரம் இருந்தால், குச்சுயிரிகள் பல்கிப்பெருகி, அவ்வுணவை உண்பவருக்குத் தொற்று இடரைக் கூட்டிவிடுகிறது.[19]நோயோடு தொடர்புடைய பொதுவான சில உணவுகளாக சமைக்காத இறைச்சி, கோழிக்கறி, கடலுணவு, மூட்டைகள்; பச்சைக் கீரைகள், தொற்று நீக்காத பால், மென்வெண்ணெய், பழ, காய்கறிச் சாறுகள் ஆகியன அமைகின்றன.[35]வளரும் நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்கச் சகாராப் பகுதி, ஆசியா, காலரா இரைப்பைக் குடலழற்சிக்கான பொதுக் காரணியாக உள்ளது. இந்தவகைத் தொற்று மாசுற்ற நீராலும் உணவாலும் கடத்தப்படுகிறது.[36]
முதியவரில் அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு நச்சீனும் ''குளோசுட்டிரிடியம் டிப்பிசைல் ஒரு முதன்மையான காரணியாக அமைந்துவிடுகிறது.[19] இந்தக் குச்சுயிரிகளைக் குழந்தைகள் அற்குறியேதும் இல்லாமல் பெற்றிருக்கலாம்.[19] மருத்துவமனையில் சேர்ந்தவருக்கும் உயிர்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியவருக்கும் இது பொதுவாக ஏற்படும் வயிற்றுப்போக்காக அமைகிறது.[37] உயிர்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியவருக்குச் சுட்டாபைலோகாக்கசு அவுரியசுத் தொற்று வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.[38]கடும் பயணர் வயிற்றுப்போக்கு வழக்கமாக குச்சுயிரிவகை இரைப்பைக் குட்டலழற்சி தந்தாலும், நீடித்தவகையாக ஒட்டுண்ணிவகையே அமைகிறது.[39]குளோசுட்டிரிடியம் டிப்பிசைல், சால்மொனெல்லா, காம்பைலோபாக்ட்டர் ஆகிய குச்சுயிரி இனங்களுக்கு ஆட்பட்ட பிறகு அமிலத்தை அடக்கும் மருந்துகள் கணிசமாக தொற்றைக் கூட்டும் இடரை உயர்த்துகிறது.[40] H2 பகைமுரணிகளை விட முன்மி எக்கி தடுப்பிகளை உட்கொள்வோருக்குத் இத்தொற்று இடர் கூடுகிறது.[40]
ஒட்டுண்ணிவழித் தொற்று
பல ஒட்டுண்ணிகள் இரைப்பிக் குடலழற்சியை உருவாக்கலாம்.[13] இவற்றில், கியார்டியா இலேம்பிலியா மிகப் பொதுவானதாகும்; மேலும், என்ட்டமீபா இசுட்டோலிட்டிக்கல், கிரிப்ட்டோசுப்போரிடியம் உள்ளினம், இன்னும்பிறவும் கூட இத்தொற்றில் ஈடுபடலாம்.[13][29][39]மிகப் பொதுவாக, கியார்டியா தொற்று வளரும் நாடுகளில் அமைந்தாலும், இது எல்லா இடத்திலும் கூட நேரலாம்.[41]நெரிசல் மிக்க மக்கள் பகுதிக்குச் சென்றுவருபவருக்கும் குழந்தைக் காப்பகச் சிறாருக்கும், தன்னினப் புணர்ச்சியில் ஈடுபடும் ஆண்களுக்கும், பேரிடர்களுக்குப் பின்னரும் இத்தொற்று மிகப் பொதுவாக ஏற்படுகிறது.[41]
தொற்று பரவல்
மக்கள் தம் சொந்தப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் மாசற்ற நீரைப் பருகும்போதும் தொற்று கடத்தப்படுகிறது.[17] மழைக் காலங்களில் நீரின் தரம் குன்றும்போது தொற்றுப் பரவல் பொதுவாக வேகமாகக் கடத்தப்படுகிறது.[17] மிதவெப்ப மண்டலங்களின் ஆறு பருவங்களில், கார்காலத்தில் தொற்றுக்கள் மிகவும் பரவலாக உள்ளன.[19] குழந்தைகளுக்கு தொற்றுநீக்கம் செய்யாத பருகுகலங்களைப் பயன்படுத்தல் தொற்றுபரவும் காரணியாகிவிடுகிறது.[17] தொற்று கடத்தும் வீதங்கள் நெரிசலான குடும்பங்களின் நலம்பேணாத குழந்தைகளிடையேயும் கூடிவிடுகின்றன.[20][42] ஊட்டக்குறைவுள்ள நிலைமையிலும் கூடிவிடுகின்றன.[19]நோயெதிர்திறம் உருவான பெரியவர்களில் அறிகுறியற்ற சில தொற்றுயிரிகள் வாழவழியுண்டு.[19] எனவே, பெரியவரும் சில நோய்களைத் தரும் இயற்கையான கொள்கலங்களாகி விடுகின்றனர்.[19] சிகெல்லா போன்ற சில முகமைகள் முதனிகளில் தொற்ற, கியார்டியா போன்ற பிற அனைத்துவகை விலங்குகளிலும் தொற்றலாம்.[19]
தொற்றல்லாத காரணிகள்
இரைப்பைக் குடல் தடவழியில் அழற்சிதரும் பல தொற்றல்லாத காரணிகளும் உள்ளன.[1] மிகப் பொதுவாக இக்காரணிகளில் உள்ளடங்குபவையாக, NSAIDக்கள் போன்ற மருந்தூட்டங்கள், பால்மங்கள் (சிலருக்கு இவை ஒத்துக்கொள்வதில்லை), குளூட்டன்(சீலியாக் நோயுள்ளவருக்கு இது ஒத்துக்கொள்வதில்லை) போன்ற சில உணவுகள். கடும் இரைப்பைக் குடலழற்சிக்கு அடிக்கடி குரோகுன் நோயும் ஒரு தொற்றல்லாத காரணியாக அமைந்துவிடுகிறது. நோய்க்குத் துணையாக நச்சீனிகளும் தோன்றலாம். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு தரும் சில உணவுகளாக, கொன்றுண்ணும் மீன்களை உட்கொள்ளும்போது ஏற்படும் சிகுவாட்டெரா ந்ச்சாக்கம், அழுகிய மீன்கலை உட்கொள்ளும்போதும் உருவாகும் சுகோபிராயிடு நச்சாக்கம், நொறுக்குணவிற் பொதிந்த மீன்களை உண்ணும்போது விளையும் டெட்ரொடோவகை நச்சாக்கம், சரிவரத் தேக்கிவைக்கப்படாத உணவால் நேரும் தேக்குவகை நச்சாக்கம் ஆகியன அமைந்துவிடலாம்.[43]
நோய்சார் உடலியக்கவியல்
இரைப்பைக் குடலழற்சி என்பது சிறுகுடல், பெருங்குடல் அழற்சியால் வரும் வாந்தியும் வயிற்றுப் போக்குமாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தொற்றுகளாலேயே ஏற்படுகிறது.[19] சிறுகுடல் மாற்றங்கள் அழற்சினைல்லாத வீக்கமாகவும் பெருங்குடல் மாற்றங்கள் அழற்சியாகவும் அமைகின்றன.[19] தொற்றை விளைவிக்கும் நோயீனி எண்ணிக்கை ஒன்று முதல் கிரிப்ட்டோசுப்போரிடியத்துக்கு சிலவாகவும் வைபிரியோ காலரே குச்சுயிரிக்கு 108 போல பலவாகவும் அமையும்.[19]
நோயறிதல்
அறிகுறிகள், முழுமையான மருத்துவ வரலாறும், ஓர்வும் சார்ந்த அடிப்படையிலேயே இரைப்பைக் குடல் அழற்சி நோய் கண்டறியப்படுகிறது. துல்லியமான ஒரு மருத்துவ வரலாறு, நோயாளியின் குடும்பத்தில் இருக்கும் பிற உறுப்பினர்களுக்கு நோயை ஒத்த அறிகுறிகள் இருப்பது அல்லது இல்லாதிருப்பதைச் சுட்டிக் காட்டப் பயனுள்ள தகவல்களை அளிக்கும். இவற்றுள் நோயாளி மலம் கழிக்கும் நேரம், அதன் அடுக்கு நிகழ்வும் விவரமும் அவர் வாந்தி எடுக்கிற நிலையைக் கொண்டிருக்கிறாரா என்பவையும் அடங்கும்.[44]
இரைப்பைக் குடல் அழற்சியைக் கண்டறிவதில் ஒரு முழுமையான மருத்துவ வரலாறு உதவலாம். ஒரு நோயாளியின் முழுமையான, துல்லியமான மருத்துவ வரலாற்றில் அவரது பயண வரலாறு, நச்சுகளுக்கான ஆட்பாடு அல்லது பிறவகை உறுத்திகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம், உணவு சமைப்பு அல்லது சேமிப்பு வழக்கங்கள், மருத்து முறைகள் ஆகியவை அடங்கும். பயணம் செய்யும் நோயாளிகள் பானங்கள், உணவுகள் ஆகியவற்றில் உள்ள ஈ.கோலி தொற்று, ஒட்டுண்ணித் தொற்றுகளுக்கு ஆட்படலாம். மாசுற்ற நீரில் நீந்துதல் அல்லது ஐயத்திற்கு இடமான மலை ஊற்று அல்லது கிணறுகள் ஆகியவற்றில் உள்ள புது நீரை அருந்துதல் ஆகியவை கியார்டியா மூலம் பெறும் தொற்றினை உண்டாக்கலாம். இது வயிற்றுப் போக்கை உருவாக்கும் நீரில் காணப்படும் ஒரு உயிரினமாகும்.
மருத்துவமனையில் இரைப்பைக் குடலழற்சியின் நோயறிதல் தனியருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குறிகளையும் அறிகுறிகளையும் சார்ந்தமையும்.[20] நோய்மேலாண்மையில் பயனேதும் விளைவிக்காது என்பதால், உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க வேண்டிய தேவையேதும் கட்டாயமில்லை.[17]
என்றாலும், மலத்தில் குருதி கசிந்தாலோ உணவு நச்சாகிவிட்டாலோ நோயிடர் பகுதிக்குச் சென்று வந்திருந்தாலோ மல ஆய்வு செய்யவேண்டும்.[45] கண்காணிப்பின்போது நோய்நிலை அறிய நோயறி ஓர்வுகள் இன்றியமையாதது ஆகலாம்.[20] குழந்தைகளிலும் இளஞ்சிறாரிலும் 10% பேருக்குக் குருதிச் சர்க்க்கரைக்குறை ஏர்படுவதால், இவர்களுக்குக் குருதியினிம ஓர்வு பரிந்துறைக்கப்பட்டுள்ளது.[28] கடும் நீரிறக்கம் உள்ளபோது மின்பகுளியும், நீரகச் செயல்பாடும் சரிபார்க்கப்படல் வேண்டும்.[13]
நீரிழப்பு
நீரிறக்கம் மிதமானது(3–5%)மீடைநிலையானது(6–9%) கடுமையானது(≥10%) எனப் பகுக்கப்படுவதால், நோய்மதிப்பீட்டில் ஒரு தனியரின் நீரிறக்க நிலையைத் தீர்மானிப்பது முதன்மையானதாகும்.[1] குழந்தைகளில் இடைநிலை, கடும் நீரிழப்புக்கான மிகத் துல்லியமான அறிகுறி, நீடுதிற நுண்புழை மீள்நிரப்பும் மெலிவான தோல் வறட்சியுமமியல்பிகந்த மூச்சுயிர்ப்பும் ஆகும்.[28][46] பிற பயனுள்ள அறிகுறிகளாக குழிவிழுந்த கண்கள், செயல்மந்தம், கண்ணீர் வறட்சி, உலர்வாய் ஆகியனவும் பிறகண்டுபிடிப்புகளும் அமைகின்றன.[1] இயல்பான சிறுநீர்க் கழிவையும் நீர் அருந்துதலையும் உறுதிப்படுத்தவேண்டும்.[28] நீரிறக்க நிலையை அறிவதில் ஆய்வக மருத்துவ ஓர்வுகல் பயந்தருவதில்லை.[1] எனவே, சிறுநீர் ஓர்வோ புறஒலி ஆய்வோ பொதுவாக வேண்டியதில்லை.[47]
வேறுபாட்டுமுறை நோயறிதல்
இரைப்பைக் குடலழற்சி அறிகுறிகளைப் போலிசெய்யும் பிற காரணிகளான, குடல்வால் அழற்சி, குடல் முறுக்கம், வயிற்று அழற்சி நோய்கள், சிறுநீர்த்தடவழித் தொற்றுகள், நீரிழிவு நோய் போன்றவை உள்ளடங்குதலை முதலில் நீக்கிவைக்க முயலவேண்டும்.[13] இவ்வகையில், கணைய அழற்சி அல்லது குறைபாடு, சிறுகுடல் நோய்த்தொகை, விப்புள் நோய், வயிற்றுக்குழி நோய், மலமிளக்கியின் தவறான பயன்பாடு என்பவையும் கருதப்படவேண்டும்.[48] வாந்தியும் வயிற்றுப்போக்கும் உடன் இணையாமல் அவற்றில் ஒன்று மட்டும் உள்ளபோது வேறுபாட்டியல் நோயறிதல் மேலும் சிக்கலாகிவிடுகிறது.[1]
வாந்தி, அடிவயிற்று வலி, ஓரளவு வயிற்றுப்போக்கு உடன் குடல்வால் அழற்சியும் 33% நேர்வுகளில் அமைகிறது.[1] இரைப்பைக் குடலழற்சி உருவாக்கும் வகைமையான பேரளவு வயிற்றுப்போக்குக்கு இவை மாறான அறிகுறிகளாகும்.[1] சிறாரில் நுரையீரல் தொற்று அல்லது சிறுநீர்த் தடவழித் தொற்று வாந்தியையும் வயிற்றுப்போக்கையும் உருவாக்கலாம்.[1] வயிற்றுப்போக்அற்ற, வயிற்றுவலி, குமட்டல், வாந்திப் போன்ற அறிகுறிகள் செவ்வியல் நீரிழிவுக் கொழுப்பமிலமிகையால்(DKA) ஏற்படலாம்.[1] ஓராய்வு சிறாரில் 17% பேருக்கான DKA நோய்க்கு மாற்றாகத் தொடக்கநிலை நோயறிதலின்போது இரைப்பைக் குடலழற்சி நிலவுவதாக தவறாக உனரப்பட்டுள்ளது.[1]
தடுப்பு முறைகள்
சுருள்நச்சுயிரி ஓர்வுகளின் நேர்முக நூற்றன்வீத முடிவுகள், கண்காணிப்பு வாரம், ஐக்கிய அமெரிக்கா, ஜூலை 2000 – ஜூன் 2009
நோயெதிர்திறம் வழியாகவும் இரைப்பைக் குடல் அழற்சியினைத் தடுக்கலாம்.[49] அமெரிக்க ஐக்கிய நாடுகள் உணவு, மருந்து மேலாண்மை நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் ரோட்டடெக் என்னும் சுருள்நச்சுயிரியை ஆறு முதல் 32 வாரங்கள் வரையிலான குழந்தைகளுக்கு, நச்சுயிரி சார் இரைப்பைக் குடல் அழற்சி நோய் வராமல் இருப்பதற்காக, அளிக்கலாம் என ஒப்புதல் அளித்தது.[50] இருப்பினும், இத்தடுப்பூசிகளால் குளிர் காய்ச்சலை ஒத்த அறிகுறிகள் விளையலாம்.
நீர், துப்புரவு, நலம்பேணல்
எளிதாக கிடைக்கும் மாசற்ற நீர்வழங்கல், நல்ல துப்புரவு நடைமுறைகள் இரண்டும் தொற்று வீதங்களைக் குறைக்கவும் இரைப்பைக் குடலழற்சியைக் கணிசமாகக் குறைக்கவும் முதன்மையானவையாகும்.[19] சவர்க்காரத்தால் கையைக் கழுவுதல் போன்ற சொந்த நலம்பேணல் நடவடிக்கைகள் 30% அளவுக்கு இரைப்பைக் குடலழற்சி நிகழ்வீதத்தைக் குறைகின்றன.[28] சாராயமூட்ட குழைவுகளும் கூட நல்ல விளைவுகளைத் தருகின்றன.[28] மாசுற்ற உணவையும் பருகுகளையும் தவிர்த்தல் நல்லது.[51]
நலநிலைமை குறைந்த இடங்களில், முலைப்பாலூட்டலும் நலம்பேணலின் மேம்பாடும் முதன்மை வாய்ந்தனவாகும்.[17] முலைப்பால் தொற்றின் நிகழ்வீதத்தையும் நிகழ்நேரத்தையும் குறைக்கிறது.[1]
தடுப்பூசி போடல்
உலக நலவாழ்வு நிறுவனம் 2009 இல் பாதுகாப்புக்காகவும் நல்ல விளைவுக்காகவும் உலகளாவிய அளவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சுருள்நச்சுயிரி தடுப்பூசி போட பரிந்துரைத்தது.[30][52]
அப்போது இரண்டு சுருள்நச்சுயிரி தடுப்பூசிகள் நடப்பில் இருந்தன; மேலும், பல தடுப்பூசிகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.[52] ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தடுப்பூசிகள் குழந்தைகளிடையே அமையும் கடுமையான நோயைக் குறைத்தன[52] தேசிய தடுப்பூசி நோயெதிர் திட்டங்கள் செயற்பட்ட நாடுகளில் நோய் நிடழ்வீதமும் கடுமையும் குறைந்தன.[53][54]
இந்த தடுப்பூசி, சூழலில் நிலவும் தொற்றுகளைக் குறைத்து, தடுப்பூசி போடாத குழந்தைகளின் நோய் வீதத்தையும் குறைத்தன.[55]அமெரிக்க ஐக்கிய அரசின் 2000 இல் இருந்தான சுருள்நச்சுயிரித் தடுப்பூசித் திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, கணிசமாக 80% பேருக்கு வயிற்றுப்போக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது.[56][57][58]முதல் தடுப்பூசியை6 முதல் 15 வார அகவையுள்ள குழந்தைகளுக்குப் போடவேண்டும்.[30] ஈராண்டுகட்குப் பின்னர், காலரா ஊசி 50–60% பேருக்கு விளைவு மிக்கதாக அமைகிறது.[59]பல தடுப்பூசிகள் இரைப்பைக் குடலழற்சிக்கு எதிராக உருவாக்கப்படுகின்றன எடுத்துகாட்டாக, உலக அளவில் இரைப்பைக் குடலழற்சிதரும் இரு முதன்மைக் காரணிகளான சிகெல்லா, குடல்நச்சாக்க ஈ.கோலிக்கு எதிரான குச்சுயிரித் தடுப்பூசிகள் நடப்பில் உள்ளன.[60][61]
நோய்மேலாண்மை
இரைப்பைக் குடல் அழற்சி பொதுவாகக் கடுமையானதாவும், தானாகவே தீர்ந்து விடுவதாகவும் உள்ள ஒரு நோய். எனவே இதற்கு மருந்துகள் ஏதும் தேவைப்படுவதில்லை.[27] மருத்துவ நோக்கம் இழந்துவிட்ட நீர்மங்கள், மின்பகுளிகளை மீட்பதே. குழந்தைகளில் இத்தகைய மிதமான முதல் நடுத்தரமான நீரிழப்புகளைச் சமன்படுத்த வாய்வழி வறட்சி நீக்கல் முறையே விரும்பத்தக்கதாகும்.[62] இருப்பினும், வாந்தியின்போது ஏற்படும் குழந்தைகளின் நீரிழப்பைக் குறைக்க வாந்தித் தவிர்ப்பிகளான மெட்டோகுளோப்பிரமைடு ஓண்டான்செட்டிரான் ஆகியன பயன்தருகின்றன .[63][64] மேலும், பூட்டிலிசுகோபோலாமைன் அடிவயிற்று வலையைக் குறைக்க பயன்தருகிறது.[65]
வறட்சி நீக்கல்
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வறட்சி நீக்கல், அதாவது இழந்துவிட்ட நீர், மின்பகுளிகளை மீட்டளிப்பதே முதன்மையான மருத்துவமாகும். நோயாளிக்கு வாய்வழி நீரேற்றக் கரைசலை அளிப்பதன் வழி இது விரும்பத்தக்க வகையில் சரிகட்டப்படுகிறது. இருப்பினும், நோயாளி நனவிழந்த நிலையில் இருந்தாலோ அல்லது கடும் நீரிழப்பு நிலவினாலோ, சிரைவழியாக நீரேற்றக் கரைசலைச் செலுத்துவதும் தேவைப்படலாம்.[66][67][68][69] கோதுமை அல்லது அரிசியிலிருந்து உருவாக்கப்படும் நுண்- மாவுச்சத்து அடிப்படையிலான வாய் வழி வறட்சி நீக்க உப்புக்கள் (வாய்வழி நீரேற்ற உப்புகள்) எளிய சர்க்கரை அடிப்படையிலான வாய்வழி நீரேற்றப் பொருட்களை விட திறன் கொண்டவையாக உள்ளன.[70][71]
ஐந்து வயதிற்கும் கீழான குழந்தைகளுக்கு மென்பருகுகள், பழச்சாறுகள் போன்ற சர்க்கரை மிகுந்த நீர்மங்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம், இவை வயிற்றுப் போக்கினை கடுமையாக்கக் கூடும் என்பதேயாகும்.[27] குறிப்பிட்ட வாய்வழி நீரேற்ற உப்புகள் கிடைக்கவில்லை எனில் அல்லது அது சுவைக்கவில்லை எனில், வெறும் நீரினைக் கூடப் பயன்படுத்தலாம்.[27]நீர்மங்களைச் செலுத்த வய்வழிக் குடல் குழலை இளஞ்சிறாருக்குத் தேவைப்பட்டால் பயனபடுத்தலாம்.[13] சிரையூடே நீர்மச் செலுத்தம் வேண்டியிருந்தால், ஒருமணி முதல் நான்கு மணி வரைச் செலுத்தலே போதுமானதாகும்.[72]
உணவு முறைமை
வாய்வழி வறட்சி நீக்கல் கரைசல் அளித்தபின், தாய்ப்பால் பெறும் குழந்தைகளுக்குத் தேவையின்பேரில் தாய்ப்பால் அளிப்பதும், கலவை முறை உணவு பெறும் குழந்தைகளுக்குத் தமது கலவை உணவை உடனடியாகத் தொடர்வதும் பரிந்துரைக்கப்படுகின்றன. [73][74] பாலினிமம் அற்ற அல்லது பாலினிமம் குறைந்த கலவைகள் பொதுவாகத் தேவைப்படுவதில்லை.[74] பாதியளவு திட அல்லது திட உணவு பெறும் குழந்தைகள் தங்களது வழக்கமான உணவினையே வயிற்றுப் போக்கின்போதும் உட்கொள்ளலாம். எளிய சர்க்கரை மிகுந்த உணவுகள் தவிர்க்கப்படவேண்டும். காரணம், சவ்வூடு பரவற் சுமையானது வயிற்றுப் போக்கினை கடுமையாக்கலாம். ஆகவே, மென் பருகுகள், பழச்சாறுகள், இன்னும் பிற சர்க்கரை மிகுந்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.[73] உணவைத் தவிர்ப்பது என்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. மாறாக, உடனடியாக, வழமையான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதே ஊக்குவிக்கப்படுகிறது.[75][74] பிராட் உணவு முறை (BRAT) (அதாவது வாழைப்பழங்கள், சோறு, ஆப்பிள் பழச்சாறு, வாட்டடை ஆகியவை கொண்ட உணவு) தற்போது பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம், இதில் உள்ள சத்துக்கள் போதுமானவையாக இல்லாதிருப்பதும் வழமையான உணவினை விட அதிகப் பயன் ஒன்றும் இதில் இல்லை என்பதுமேயாகும்.[74]
2020 ஆம் ஆண்டின் கொக்கிரேனின் மீள்பார்வை நலநுண்ணுயிரிகளை உட்கொள்வதால், இரன்டு நாட்களுக்கோ அதற்கு மேலுமோ வயிற்றுப்போக்கு உள்ளவருக்குப் பலனேதும் கிடைப்பதில்லை எனவும் இது வயிற்றுப்போக்கு நேரத்தைக் குறைப்பதாக சான்றேதும் நிறுவப்படவில்லை எனவும் கூறுகிறது.[76] அவை உயிர்கொல்லி மருந்தால் நலப்படுத்தும் வயிற்றுப்போக்கைத் தவிர்க்கவும் தீர்க்கவும் உதவலாம்.[77] இதேபோல, யாகுர்த்து நொதுப்பித்த பால்பொருட்கள் நலந்தரலாம்.[78] வளரும் நாடுகளின் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைத் தவிர்க்கவும் தீர்க்கவும் துத்தநாக நிரப்பூட்டம் விளை மிக்கதாக உள்ளது.[79]
மருத்துவங்கள்
வாந்தியடக்கிகள்
வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு வாந்தியடக்கிகள் பலன் அளிக்கலாம். சிரைவழியாக நீர்மங்கள் செலுத்துதல், மருத்துவ மனையில் சேர்த்தல், வாந்தி எடுத்தல் ஆகியவை அருகியே அமைபவருக்கு, ஓன்ட்டாசுட்டிரான் மருந்தின் ஒரு தடவை தரும் மருந்தளவே பலன் தந்துள்ளது.[80][81][82][64][83] மெட்டோகுளோப்பிரமைடு மருந்தும் பலன் அளிக்கலாம். .[84][85]என்றாலும், ஆண்டன்செட்டிரான் பயன்பாடு குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு வரவழைக்கும் வீதத்தைக் கூட்டுகிறது.[86]மருத்துவ மதிப்பீடின்படி, சிரையூடே தரும் எண்டான்செட்டிரானை வாய்வழியாகம் பொதுவாகத் தரலாம்.[87] டைமுன்கைதிரேட் வாந்தியைக் குறைத்தாலும், மற்றபடி கணிசமான மருத்துவப் பலனேதும் தருவதில்லை.[1]
நுண்ணுயிர்கொல்லிகள்
நுண்ணுயிர்கொல்லிகள் பொதுவாக இரைப்பைக் குடல் அழற்சிக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆயினும், சில நேரங்களில் (வயிற்றுக் கடுப்பு அறிகுறிகள் மிகவும் கடுமையா இருந்தால் அவை பரிந்துரைக்கப்படுகின்றன.[88] அல்லது நோய்தந்த நுண்ணுயிரி தனிமப்படுத்தப்பட்டு அது தான் காரணம் என ஐயம் இருந்தாலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.[89] இவ்வாறு நுண்ணுயிர்கொல்லிகளை அளிப்பது என்று முடிவாகி விட்டால், பெரும்பாலும், புளூரோகுவினோலோனுக்கு மாற்றாக அசித்ரோமைசின் போன்ற மாக்ரோலைட்டுகள்பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இது முன்னதை விட உயர்தடுப்பைத் தரவல்லன<refname="SleisengerFordtran"/> [24] நுண்ணுயிர்கொல்லிகளால் பொதுவாக உருவாகும் பெருங்குடல் மென்தோல் அழற்சி, இதற்குக் காரணமான மருந்தை நிறுத்துவதாலோ, மெட்ரோனிடசோல் அல்லது வாங்கோமைசின் மருந்து அளிப்பதனால் மேலாண்மை செய்யப்படுகிறது.[90][91]மருத்துவம் அளிக்கவியன்ற குச்சுயிரி, முன்னுயிரிகளி சிகெல்லா,[92]சால்மொனெல்லா டைப்பி,[93]கியார்டியாஆகியன உள்ளடங்கும்.[41]கியாஎடியா அல்லது என்ட்டாமீபியா இசுட்டோலிட்டிக்கா தொற்றியவருக்கு டினிடாசோல் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது; இது மெட்ரோனிடாசோலைவிட மேன்மையுள்ளதாக அமைகிறது.[41][94]காய்ச்சலோடு குருதிகசியும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு நுண்னுயிர்கோல்லி மருந்துகளை தர உலக நலவாழ்வு நிறுவனம் பரிந்துரைக்கிறது.[1]
இயக்கமெதிர் செயலிகள்
இயக்க எதிர்ச் செயலி மருந்துகளால் கோட்பட்டியலான சிக்கல்கள் உருவாகலாம். இருப்பினும், மருந்தகப் பட்டறிவுகள் இத்தகைய சிக்கல்களைச் சுட்டிக் காட்டவில்லை.[48][90] குருதிக் கசிவுள்ள வயிற்றுப் போக்கு அல்லது காய்ச்சலுள்ள வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு இவை அளிக்கப்படுவதில்லை.[15]ஓபியாயிடு ஒத்த உலோபர்மைடு வயிற்றுப் போக்கிற்கான அறிகுறிக்கு ஏற்ப தரும் மருத்துவமாகும்.[90] குழந்தைகளில் இது மூளையின் முதிராத குருதித் தடுப்பானைத் தாண்டி நச்சு விளைக்கக் கூடும் என்பதால், அவர்களுக்கு இதைப் பரிந்துரைப்பதில்லை. பிஸ்மத் சப்சாலிசிலேட் எனும் நீரில் கரையாத மூவிணைதிற பிஸ்மத்தும் சாலிசிலேட்டும் உள்ள நீர்மத்தை மிதமான-நடுத்தர நோய் நேர்வுகளில் பயன்படுத்தலாம்.[48][90] ஆனால், கோட்பாட்டியலாக இது நச்சை உருவாக்கும் வாய்ப்புள்ளது.[1]
மாற்று மருந்து
துத்தநாகம்
உலக நலவாழ்வு நிறுவனம், சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இரைப்பைக் குடல் அழற்சி தொடங்கிய பின்னர் இரண்டு வாரங்கள் வரையிலும் இணைப்புணவாக துத்தநாகம் தர வேண்டும் என பரிந்துரைக்கிறது.[95] இருப்பினும், இத்தகைய இணைப்புணவினால் பலன் ஏதும் இருப்பதாக, 2009ஆம் ஆண்டு நிகழ்த்திய ஆய்வில் தெரியவரவில்லை.[96]
சிக்கல்கள்
நீரிழப்பு என்பது வயிற்றுப் போக்கு காரணமாக ஏற்படும் பொதுவான ஒரு சிக்கல். நீர் அருந்தாமல் இருப்பதாலும் அல்லது பழச்சாறு/ பருகுகள் ஆகியவற்றை அருந்துதல் வழியாகவும் இது மேலும் கடுமையாகலாம்.[97] பாலைப் முதன்மையாகக் கொண்டுள்ள எளிதில் சர்க்கரையாகும் மாவுச்சத்தை முறையற்று உட்கொள்வதனாலும் இது உருவாகலாம். குழந்தைக்கு வயிற்றுப் போக்கினை அதிகரிப்பினும்[98], தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடக் கூடாது.
நோய்ப்பரவு இயல்
வயிற்றுப்போக்கால் 2012 இல் நேர்ந்த ஒரு மில்லியன்வீத இறப்புகள்
2004 இல் வாழ்ந்தோருக்கான, மாற்றுத்திறனுக்குச் சரிசெய்த, 100,000பேர் வீதத்தில் கணித்த வாழ்வோர் எண்ணிக்கை
no data
≤500
500–1000
1000–1500
1500–2000
2000–2500
2500–3000
3000–3500
3500–4000
4000–4500
4500–5000
5000–6000
≥6000
இரைப்பைக் குடலழற்சிக்கு 2015 இல் 2 பில்லியன் பேர் ஆட்பட்டனர் என்றும், இவர்களில் 1.3 மில்லியன் பேர் இறந்துவிட்டுள்ளனர் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[6][7] இவை அனைத்துமே பேரளவில் வளரும் நாடுகளின் சிறார்களிலேயே நிகழ்ந்துள்ளன. இந்நோயால் மிகப் பொதுவாகத் தாக்கமுறுவோராக வளரும் நாடுகளின் குழந்தைகளே பேரளவில் அமைகின்றனர்.[17] இரைப்பைக் குடலழற்சிக்கு 2011 இல் 5 அகவைக்கும் குறைந்த இளைஞர்களில் 1.7 பில்லியன் பேர் ஆட்பட்டனர்; இவர்களில் 0.7 மில்லியன் பேர் இறந்துவிட்டுள்ளனர்;[18] இவை அனைத்தும் ஏழை நாடுகளிலேயே ஏற்பட்டன.[19] 5 அகவைக்கும் குறைந்த சிறார்கள் சுருள்நச்சுயிரியால் 450,000 ஐ விடக் கூடுதலானவர் இறந்துள்ளனர்.[10][99] ஆண்டுதோறும் காலராவால் 3முதல் 5 மில்லியன் பேர் நோக்கு ஆட்பட்டு இவரில் தோராயமாக 100,000 பேர் இறந்துள்ளனர்.[36] வளரும் நாடுகளில், 2 அகவைக்கும் குறைந்த சிறார் ஒவ்வோர் ஆண்டும் அடிக்கடி ஆறை அல்லது அதற்கும் மேலாக இரைப்பைக் குடலழற்சிக்கு ஆட்படுகின்றனர்.[19] அகவை முதிர்ந்தோர் தம் வளர்நிலை நோயெதிர்திறத்தால் பொதுவாக அவரில் இந்நோய் அணுகுவதில்லை.[20]
அனைத்துக் காரணிகளாலும் ஆன இரைப்பைக் குடலழற்சியால் சிறாரில் 1980 இல் 4.6 மில்லியன் இறப்புகள் நேர்ந்தன; இவை அனைத்துமே பேரளவில் வளரும் நாடுகளிலேயே நிகழ்ந்துள்ளன.[91]பரவலான வாய்வழி நீரூட்ட மருத்துவ முறைகள் அறிமுகமானதால், இறப்புவீதம் கணிசமாக 1.5 மில்லியனுக்கு 2000 ஆம் ஆண்டளவில் குறைந்துவிட்டது.[100]ஐக்கிய அமெரிக்க நாட்டில், பொது தடுமனுக்கு அப்பால் இரண்டாவதாக, இரைப்பைக் குடலழற்சி அமைந்து 200 முதல் 375 மில்லியன் வ்யிற்றுப்போக்கு நேர்வுகள் உருவாகின்றன[19][20] ஒவ்வோராண்டிலும் இதனால், தோராயமாக பத்தாயிரம் பேர் இறக்கின்றனர்;[19] இவர்கலில் ஐந்து ஆண்டு அகவைக்கும் குறைந்த சிறார் 150 முதல் 300 பேர் இறக்கின்றனர்.[1]
சமூகமும் பண்பாடும்
இரைப்பைக் குடலழற்சி "ஆன்ட்டெசுமா வெஞ்சினம்(கருபூணல்)", "தில்லி வயிறு", "பயணர் நோய்", "புறக்கடை நோய்", எனப் பல கொச்சைப் பெயர்களில் வழங்குகிறது.[19] படைத்துறை பரப்புரைகளிலும் இதற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது; இதில் தான் "வயிறு சரியில்லை என்றால் வெற்றி இங்கில்லை" எனும் முழக்கம் தோன்றி உருவானது.[19]
ஐக்கிய அமெரிக்க நாட்டில் இரைப்பைக் குடலழற்சியுள்ளவர்கள் மட்டும் ளோராண்டில் மருத்துவரை 3.7 மில்லியன் பேர் சந்தித்துள்ளனர்.[1] and 3 million visits in France.[101]ஐக்கிய அமெரிக்காவில் ஓராண்டுக்கு இரைப்பைக் குடலழற்சியால் மட்டும் மொத்தத்தில் 23 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது;[102] இதில் சுருள்நச்சுயிரியால் மட்டும் ஓராண்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
வரலாறு
20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் "இரைப்பைக் குடல் அழற்சி" என்னும் சொல் பொதுவான பயன்பாட்டில் இல்லை. தற்போது இரைப்பைக் குடல் அழற்சி என வழங்கப்படுவது, அக்காலங்களில், குறிப்பாக, குடற்காய்ச்சல், அல்லது "காலரா மார்ப்பசு" போன்றவையாகவோ அல்லது ஓரளவில், "குடல் இறுக்கம்", "முகு நிலை", "பெருங்குடல் ஒழுக்கி", "குருதிக்கழிப்பு", "மலவாய்ச் சிக்கல்" என்பனவாகவோ வழங்கப்பட்டன.[22] அண்மைக்காலம் வரையிலும் இரைப்பைக் குடல் நோய் என்பது குறிப்பான ஒரு நோயாகக் கண்டறியப்படவில்லை என்பதை, வரலாற்றாசிரியர்களும், மரபியலாளர்களும் பிற ஆராய்ச்சியாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
1850ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் ஒன்பதாம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் யாச்சாரி தெய்லர் இரைப்பைக் குடல் அழற்சி காரணமாக இறந்தார்.[103]
பிற விலங்குகளில்
மாந்தரில் இரைப்பைக் குடலழற்சியை உருவாக்கும் அதே பல முகமைகளே(காரணிகளே), பூனைகளிலும் நாய்களிலும் இந்நோயை உருவாக்குகின்றன. இந்த மிகப் பொதுவான உயிரிகளாக கம்பைலோபாக்ட்டர், குளோசுட்டிரிடியம் டிப்பிசைல், குளோசுட்டிரிடியம் பெர்ப்பிரெஞ்சென்சு, சால்மொனெல்லா ஆகியவை அமைகின்றன.[104] A large number of toxic plants may also cause symptoms.[105]
குறிப்பிட்ட உயிரினங்களுக்கே உரிய சில முகமைகளும் உள்ளன. பெயர்நிலை இரைப்பைக் குடலழற்சி கதிர்முடி(கரோனா) நச்சுயிரி(TGEV) பன்றிகளில் நோயை உருவாக்கி, வாந்தி, வயிற்றுப்போக்கு, நீரிறக்கம் போன்ற அறிகுறிகளைத் தருகின்றன.[106] இந்நோயைப் பறவைகள் பன்றிகளுக்குத் தந்துள்ளன; இதற்கு இதுவரை குறிப்பிட்ட மருத்துவம் ஏதும் இல்லை.[107] இது மாந்தருக்குப் பரவக் கூடியதன்று. [108]
↑Zollner-Schwetz, I; Krause, R (August 2015). "Therapy of acute gastroenteritis: role of antibiotics.". Clinical Microbiology and Infection21 (8): 744–9. doi:10.1016/j.cmi.2015.03.002. பப்மெட்:25769427.
↑ 15.015.1Kasper DL, Braunwald E, Fauci AS, Hauser SL, Longo DL, Jameson JL. Harrison's Principles of Internal Medicine. New York: McGraw-Hill, 2005. 0-07-288008-2.
↑King CK, Glass R, Bresee JS, Duggan C (November 2003). "Managing acute gastroenteritis among children: oral rehydration, maintenance, and nutritional therapy". MMWR Recomm Rep52 (RR-16): 1–16. பப்மெட்:14627948.
↑ 28.028.128.228.328.428.528.628.7Tintinalli, Judith E. (2010). Emergency Medicine: A Comprehensive Study Guide (Emergency Medicine (Tintinalli)). New York: McGraw-Hill Companies. pp. 830–839. ISBN978-0-07-148480-0.
↑Barlow, Gavin; Irving, William L.; Moss, Peter J. (2020). "20. Infectious disease". In Feather, Adam; Randall, David; Waterhouse, Mona (eds.). Kumar and Clark's Clinical Medicine (in ஆங்கிலம்) (10th ed.). Elsevier. pp. 529–530. ISBN978-0-7020-7870-5.
↑ 39.039.1"Persistent Travelers' Diarrhea". United States Centers for Disease Control and Prevention. 10 July 2015. Archived from the original on 3 January 2016. Retrieved 9 January 2016. Although most cases of travelers' diarrhea are acute and self-limited, a certain percentage of travelers will develop persistent (>14 days) gastrointestinal symptoms ... Parasites as a group are the pathogens most likely to be isolated from patients with persistent diarrhea
↑Steiner, MJ; DeWalt, DA; Julie Story Byerley (9 June 2004). "Is this child dehydrated?". JAMA: The Journal of the American Medical Association291 (22): 2746–54. doi:10.1001/jama.291.22.2746. பப்மெட்:15187057.
↑"Viral Gastroenteritis". Center for Disease Control and Prevention. February 2011. Archived from the original on 24 April 2012. Retrieved 16 April 2012.
↑Tate, JE; Cortese, MM; Payne, DC; Curns, AT; Yen, C; Esposito, DH; Cortes, JE; Lopman, BA et al. (January 2011). "Uptake, impact, and effectiveness of rotavirus vaccination in the United States: review of the first 3 years of postlicensure data.". The Pediatric Infectious Disease Journal30 (1 Suppl): S56–60. doi:10.1097/INF.0b013e3181fefdc0. பப்மெட்:21183842.
↑Alhashimi D, Al-Hashimi H, Fedorowicz Z (2009). "Antiemetics for reducing vomiting related to acute gastroenteritis in children and adolescents". Cochrane Database Syst Rev (2): CD005506. doi:10.1002/14651858.CD005506.pub4. பப்மெட்:19370620.
↑Hempel, S; Newberry, SJ; Maher, AR; Wang, Z; Miles, JN; Shanman, R; Johnsen, B; Shekelle, PG (9 May 2012). "Probiotics for the prevention and treatment of antibiotic-associated diarrhea: a systematic review and meta-analysis.". JAMA: The Journal of the American Medical Association307 (18): 1959–69. doi:10.1001/jama.2012.3507. பப்மெட்:22570464.
↑Alhashimi D, Al-Hashimi H, Fedorowicz Z (2009). "Antiemetics for reducing vomiting related to acute gastroenteritis in children and adolescents". Cochrane Database Syst Rev (2): CD005506. doi:10.1002/14651858.CD005506.pub4. பப்மெட்:19370620.
↑"Use of antiemetic agents in acute gastroenteritis: a systematic review and meta-analysis". Archives of Pediatrics & Adolescent Medicine162 (9): 858–65. September 2008. doi:10.1001/archpedi.162.9.858. பப்மெட்:18762604.
↑Alhashimi D, Al-Hashimi H, Fedorowicz Z (2009). "Antiemetics for reducing vomiting related to acute gastroenteritis in children and adolescents". Cochrane Database Syst Rev (2): CD005506. doi:10.1002/14651858.CD005506.pub4. பப்மெட்:19370620.
↑Weese, JS (March 2011). "Bacterial enteritis in dogs and cats: diagnosis, therapy, and zoonotic potential.". Veterinary Clinics of North America: Small Animal Practice41 (2): 287–309. doi:10.1016/j.cvsm.2010.12.005. பப்மெட்:21486637.
↑Zimmerman, Jeffrey; Karriker, Locke; Ramirez, Alejandro; Kent Schwartz; Gregory Stevenson (15 May 2012). Diseases of Swine (10th ed.). Chichester, West Sussex: John Wiley & Sons. p. 504. ISBN978-0-8138-2267-9. Archived from the original on 28 November 2015.
குறிப்புகள்
Dolin, Raphael; Mandell, Gerald L.; Bennett, John E., eds. (2010). Mandell, Douglas, and Bennett's principles and practice of infectious diseases (7th ed.). Philadelphia: Churchill Livingstone/Elsevier. ISBN978-0-443-06839-3.