சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) (28 செப்டம்பர் 1746 – 27 ஏப்ரல் 1794) ஆங்கிலேயரான இவர் மொழியியல் அறிஞரும், நீதியரசரும் ஆவார். இவர் வங்காளத்தின்வில்லியம் கோட்டையில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இந்து மற்றும் இசுலாமிய சட்டங்களின் நீதியரசராக 22 அக்டோபர் 1783 முதல் 27 ஏப்ரல் 1794 முடிய பணியாற்றியவர். இவர் 1770-ஆம் ஆண்டில் மனுதரும சாத்திரம் எனும் நூலை ஆங்கில மொழியில் வெளியிட்டார். [3]
இந்து மற்றும் முஸ்லீம் சமயச் சட்டங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத மொழியை ஆழ்ந்து கற்றார. 1794-இல் இந்து வாழ்வியல் சட்டங்களைக் கூறும் மனுதரும சாத்திரத்தைஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார். காளிதாசரின்சாகுந்தலம் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1792-இல் இசுலாமியச் சட்ட முறைமையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சமஸ்கிருதம், இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளின் பொதுவான கூறுகள் குறித்தான இவரது மொழியியல் ஆய்வுகள 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒப்பீட்டு மொழியியலின் வளர்ச்சிக்கான உந்துதலாக அமைந்தது.
மேலும் 1771இல் இவர் எழுதிய பாரசீக மொழி இலக்கண நூல் மற்றும் இஸ்லாமியத்திற்கு முந்தைய ஏழு அரபு மொழிகளின் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பான மொல்லாகட் (1782) கவிதைகள் பிரித்தானிய மக்களுக்கு அறிமுகமானது.
Cannon, Garland H. (1964). Oriental Jones: A biography of Sir William Jones, 1746–1794. Bombay: Asia Pub. House Indian Council for Cultural Relations.
Cannon, Garland H. (1979). Sir William Jones: A bibliography of primary and secondary sources. Amsterdam: Benjamins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்90-272-0998-7.
Mukherjee, S. N. (1968). Sir William Jones: A study in eighteenth-century British attitudes to India. London, Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-521-05777-9.
"Sir William Jones (1746 - 1794): As a Philologist, a Persian Scholar and Founder of Asiatic Society" by R M Chopra, INDO-IRANICA, Vol.66, (1 to 4), 2013.