விளாச்சேரி
விளாச்சேரி (ஆங்கிலம்: Vilacheri) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில், 9°53′45″N 78°03′39″E / 9.8958°N 78.0609°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விளாச்சேரி பகுதி அமையப் பெற்றுள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, நிலையூர், சம்பக்குளம், பசுமலை, திருநகர், தனக்கன்குளம் மற்றும் தோப்பூர் ஆகியவை விளாச்சேரி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 அடிப்படையில், விளாச்சேரி பகுதியின் மக்கள்தொகை 5,616 ஆகும். விளாச்சேரியில் மண்பாண்ட கைவினைஞர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் உருவாக்கும் பொம்மைகள், மண்பாண்டங்கள் வருடம் முழுவதும் விற்பனையாகின்றன.[2] மேலும், சுவாமி சிலைகள் (குறிப்பாக, விநாயகர் சிலைகள், கிருஷ்ணர் சிலைகள், இயேசு கிறிஸ்து சிலைகள்) போன்றவை முறையே விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களையொட்டி அதிகளவில், பல பகுதிகளிலிருந்து வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்படுகின்றன.[3] சிருங்கேரி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளின் நல்லாசியுடன், மதுரை ஐயப்பா சேவா சங்கத்தினரால், ஐயப்பன் கோயில் ஒன்று விளாச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ளது.[4] இங்கு பட்டாபிராமர் கோயில் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.[5] விளாச்சேரி பகுதியானது, திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது. மேலும் இப்பகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதி வரம்புக்குட்பட்டதாகும்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia