வி. சி. சந்திரகுமார்
வி. சி. சந்திரகுமார் (V. C. Chandhirakumar) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல்வாதியாவார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கே.எசு.தென்னரசு வி.சி. சந்திரகுமாரை வீழ்த்தி வெற்றிபெற்றார்.[2] நெசவாளர் குடும்ப பின்னணி கொண்ட வி.சி.சந்திரகுமார் 2016 ஆம் ஆண்டு முதல் திமுக மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2023 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ. வெ. கி. ச. இளங்கோவன் உடலக்குறைவால் இறந்ததை அடுத்து மீண்டும் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5, 2025-இல் நடைபெற்றது. இத்தேர்தலில் சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாம் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். போட்டியிட்ட தேர்தல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia