ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2025ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2025 பெப்ரவரி 05 அன்று நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2023 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ. வெ. கி. ச. இளங்கோவன் உடநலக்குறைவால் இறந்ததை அடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் இராசீவ் குமார், டெல்லியில் நிருபர்களைச் சந்தித்து டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பெப்ரவரி 05-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
போட்டிதிமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரசு வென்ற இத்தொகுதியில் இம்முறை திமுக போட்டியிட்டது. அதிமுக, தேமுதிக, பாசக ஆகியவை இத்தேர்தலைப் புறக்கணித்தன. திமுக தனது வேட்பாளராக வி. சி. சந்திரகுமாரை அறிவித்தது.[2][3] இந்த இடைத்தேர்தலில் காங்கிரசு போட்டியிடாது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.[4] எதிர்கட்சியான அதிமுக இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.[5] [6] பாசகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.[7] தேமுதிகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த.[8][9] தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.[10] நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி, 2025 சனவரி 1 அன்று சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்தது.[11][12] நாம் தமிழர் மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பின்[13][14] சந்தித்த முதல் தேர்தல் இது. இத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒலிவாங்கிச் சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியது.[15] வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ள நிலையில் கருநாடக மாநிலத்தின் பெங்களுருவை சேர்ந்த பத்மாவதியின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சின்னம் வழங்கும் போது இவ்விதியைச் சுட்டிக்காட்டி சில கட்சி சாரா வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பத்மாவதியின் வேட்புமனு அதிகாரிகளால் விலக்கப்பட்டது.[16].[17] இந்த இடைத்தேர்தலில் 68 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2023 இடைத்தேர்தலை விடக் குறைவாகும்.[18] 2023இல் 75% வாக்குகள் பதிவாகின. 2021இல் பெற்ற வாக்குகள்
2023 இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள்
முடிவு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia