வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள் (Veedu Manaivi Makkal) திரைப்படம் 1988-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்க என். ராதாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் விசு, கே. ஆர். விஜயா, பாண்டியன், சீதா, எஸ். வி. சேகர் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர்கள்
கதைச்சுருக்கம்சுப்பையா பிள்ளை (விசு) ஓர் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். அவரும், அவரது மனைவி லட்சுமி, கணவனை பிரிந்து வாடும் மூத்த மருமகள் பார்வதி, கல்யாணமாகாமல் இருக்கும் முதல் மகள் சுலக்ஷனா, வேலை கிடைக்காமல் இருக்கும் இரண்டாவது மகன் சங்கர், கடைசி மகள் உமா ஆகியோருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், சுப்பையா பிள்ளை தன் குடும்ப உறுப்பினர்களுக்கும், சுற்றியிருக்கும் சக மக்களுக்கும் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு அணுகி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை களமாகும். எஸ். வி. சேகர் இப்படத்தில் ஒரு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்புவீடு மனைவி மக்கள், டி. பி. கஜேந்திரன் அவர்களின் முதல் படமாகும். விசுவின் பாணிக்கு[சான்று தேவை] ஏற்றவாறு எழுதப்பட்ட கதையாகும். இப்படத்தின் இறுதி ஒளிநாடாவின் நீளம் 4117.32 மீட்டர்கள் ஆகும்.[1] இசைதிரைப்படத்தின் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆவார்கள்.[2][3]
வெளியீடும் வரவேற்பும்15 ஜனவரி 1988-ல் வீடு மனைவி மக்கள் திரைப்படம் வெளியானது. வெளியான அடுத்த வாரம், இப்படம் விசுவின் முந்தயப்படங்களை (குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு (திரைப்படம்), சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி) போலவே இருப்பதாகவும், மேலும் கே. ஆர். விஜயாவின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும், என். கிருஷ்ணஸ்வாமி இந்தியன் எக்சுபிரசில் விமர்சனம் செய்தார்.[4] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia