வீரப்ப மொய்லி
மூடுபித்ரி வீரப்ப மொய்லி (Moodbidri Veerappa Moily, கன்னடம்: ಮೂಡಬಿದ್ರಿ ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ) (பிறப்பு: சனவரி 12, 1940) கருநாடக மாநில அரசியல்வாதியும் நடுவண் அரசின் முன்னாள் வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார்.[1] 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றார்.[2] மொய்லி துளு இனத்தைச் சேர்ந்த முதல் கருநாடக முதலமைச்சராக நவம்பர் 19, 1992 முதல் திசம்பர் 11, 1994 வரை பணியாற்றி உள்ளார். உடுப்பி மாவட்டத்தின் கர்கலா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆந்திர அரசியலை கண்காணித்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார். மேற்கோள்களும் குறிப்புக்களும்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia