வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி (Vemireddy Prabhakar Reddy) என்பவர் விபிஆர் மைனிங் இன்பிரா எனும் நிறுவனத்தின் நிறுவனரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3] ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் 2015 இல் வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி அறக்கட்டளையைத் (VPR அறக்கட்டளை) தொடங்கினார். மேலும், VPR விகாஸ், [4] VPR வித்யா [5] மற்றும் VPR வைத்யா என்ற பெயரில் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வந்தார்.
2018 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி 21 பிப்ரவரி 2024 இல் அக்கட்சியில் இருந்து விலகினார், [6] 02 மார்ச் 2024 இல் ஆந்திர பிரதேசத்தின் மேனாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். [7]