வெள்ளி ஆக்சைடு
வெள்ளி ஆக்சைடானது (Silver(I) oxide) Ag2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது ஒரு நுண்ணிய துகள்களால் ஆன கருமை அல்லது அடர் பழுப்பு நிறமுடைய சேர்மம் ஆகும். இது மற்ற வெள்ளி சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. தயாரிப்புவெள்ளி(I) ஆக்சைடு வெள்ளி நைட்ரேட்டின் நீர்க்கரைசலுடன் கார ஐதராக்சைடின் நீர்க்கரைசலை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த வினைக்கு விரும்பத்தகுந்த ஆற்றலியல் உதவுவதால் அதிக அளவிலான வெள்ளி ஐதராக்சைடு தேவைப்படுவதில்லை:
அமெரிக்க காப்புரிமை எண் 20050050990 நுண்மையாக துாளாக்கப்பட்ட கடத்தும் தன்மையுள்ள நிரப்பும் பசையை தயாரிக்க உதவும் வெள்ளி ஆக்சைடின் தயாரிப்பு முறையை விவரிக்கிறது. அமைப்பு மற்றும் பண்புகள்வெள்ளி ஆக்சைடு (Ag2O) நேர்கோட்டு வடிவத்தையும் இரு-அச்சு வடிவத்தில் கொண்டு நான்முகி ஆக்சைடுகளால் இணைக்கப்பட்ட வெள்ளியை மையத்தில் கொண்டுள்ளது. இது தாமிர ஆக்சைடுடன் ஒத்த வடிவத்தைக் கொண்டுள்ளது. இச்சேர்மத்தை சிதைக்கும் கரைப்பான்களில் கரைகிறது. இது Ag(OH)2− ஐ உருவாக்குவதாலும் ஒத்த நீராற்பகுப்பு விளைபொருட்களை உருவாக்குவதாலும் நீரில் சிறிதளவு கரையும் தன்மையுடையது. [சான்று தேவை] இது அமோனியாவில் கரைந்து கரையக்கூடிய வழிப்பொருட்களைத் தருகிறது. [சான்று தேவை] Ag2O இன் களியானது அமிலத்தால் எளிதில் தாக்கப்படுகிறது.:
மற்ற வெள்ளி சேர்மங்களைப் போல, வெள்ளி ஆக்சைடானது ஒளிஉணர் தன்மையுடையது. இது 280 °செ வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தப்படும் போது சிதைவடைகிறது.[8] பயன்பாடுகள்இந்த ஆக்சைடானது வெள்ளி-ஆக்சைடு மின்கலங்களில் வெள்ளி (I,III) ஆக்சைடாக, Ag4O4 பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியலில், வெள்ளி ஆக்சைடானது ஒரு மிதமான ஆக்சிசனேற்றியாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இது ஆல்டிகைடுகளை கார்பாக்சிலிக் அமிலங்களாக ஆக்சிசனேற்றம் செய்கிறது. இந்த வினைகளில் தேவைப்படும் நேரங்களில் வெள்ளி நைட்ரேட்டையும் கார ஐதராக்சைடுகளையும் உடனுக்குடன் வினைபுரியச்செய்து கிடைக்கும் வெள்ளி ஆக்சைடு சிறப்பான முடிவுகளைத் தருகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia