வெள்ளி சல்பேட்டு(Silver sulfate) என்பது Ag2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டதொரு அயனிச் சேர்மமாகும். வெள்ளி முலாம் பூசுதலிலும் கறைபடுத்தாமலிருக்க வெள்ளி நைட்ரேட்டுக்கு மாற்றாகவும் இது பயன்படுகிறது. இச்சேர்மம் நீரில் சிறிதளவு கரையக்கூடியதாக உள்ளது. சாதாரண அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளதால் இச்சல்பேட்டை எளிதாகச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் முடியும். ஒளி அல்லது காற்றில் படநேர்ந்தால் இது நிறம் மாறும் தன்மையுடையது.
பின்னர் சூடான நீரில் வீழ்படிவைக் கழுவி வெள்ளி சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது.
வெள்ளி(II) சல்பேட்டு
ஓரு இணைதிறன்வெள்ளிஅயனிக்குப் பதிலாக இரு இணைதிறன் வெள்ளி அயனி கொண்ட வெள்ளி(II)சல்பேட்டு முதன் முதலில் 2010 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வெள்ளி(II) புளோரைடுடன் கந்தக அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் இது தயாரிக்கப்பட்டது. கருப்பு நிறத் திடப்பொருளான இது 120 பாகைசெல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து ஆக்சிசனை வெளியேற்றி பைரோ சல்பேட்டாக உருவாகிறது.
↑ 3.03.13.2Morris, Marlene C.; McMurdie, Howard F.; Evans, Eloise H.; Paretzkin, Boris; Groot, Johan H. de; Hubbard, Camden R.; Carmel, Simon J. (1976-06). "13". Standard X-ray Diffraction Powder Patterns. Vol. 25. Washington: Institute for Materials Research National Bureau of Standards. {{cite book}}: Check date values in: |date= (help)