வெள்ளி நைட்ரேட்டு (Silver nitrate) என்பது AgNO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மமானது வெள்ளியின் பல சேர்மங்களுக்கான முன்னோடிச் சேர்மம் ஆகும். வெள்ளை ஆலைடுகளைக் காட்டிலும் மிக அதிக அளவில் ஒளிக்கு குறைவான உணர்தல் திறனுடையதாகும். இது வெள்ளி என்பது நிலவுடன் தொடர்புடையது என்று பண்டைய இரசவாதிகள் கருதியதால் உருவான லூனா காரம் எனவும் அழைக்கப்பட்டது[7]
வெள்ளி நைட்ரேட்டு, வெள்ளிப் பணம் அல்லது வெள்ளித்தாள் போன்றவற்றை நைட்ரிக் அமிலத்துடன் வினையில் ஈடுபடச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம். இதன் விளைவாக வெள்ளி நைட்ரேட், நீர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் உருவாகின்றன. இந்த வினையின் துணை விளைபொருட்கள் பயன்படுத்தப்படும் நைட்ரிக் அமிலத்தின் செறிவைப் பொறுத்ததாகும்.
3 Ag + 4 HNO 3 (குளிர் மற்றும் நீர்த்த) → 3 AgNO 3 + 2 H 2 O + NO
Ag + 2 HNO 3 (சூடான மற்றும் செறிவூட்டப்பட்ட) → AgNO 3 + H 2 O + NO 2
நச்சுத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடுகள் வினையின் போது உருவாகும் என்பதால் இந்த வினையானது ஒரு ஆவி வாங்கியின் கீழ் நிகழ்த்தப்படுகிறது.[9]
வினைகள்
வெள்ளி நைட்ரேட்டுடன் ஒரு பொதுவான வினை வெள்ளி நைட்ரேட்டின் கரைசலில் தாமிரத்தின் ஒரு தடியை நிறுத்தி சில மணி நேரம் விட்டு விடும் போது, வெள்ளி நைட்ரேட் தாமிரத்துடன் வினைபுரிந்து வெள்ளி உலோகத்தின் முடி போன்ற படிகங்களையும், காப்பர் நைட்ரேட்டின் நீலக் கரைசலையும் உருவாக்குகிறது:
வெள்ளியின் உப்புகளிலேயே மிகவும் விலை குறைவான உப்பு வெள்ளி நைட்ரேட்டாகும்; இச்சேர்மம் இதர நன்மைகளையும் கொண்டுள்ளது. வெள்ளி நான்மபுளூரோபோரேட்டு மற்றும் வெள்ளி பெர்குளோரேட்டு போன்றவற்றிற்கு மாறாக இச்சேர்மம் நீர் உறிஞ்சும் திறன் கொண்டதல்ல. ஒப்பீட்டளவில் இது ஒளியின் தாக்கத்திற்கு ஓரளவு நிலைத்தன்மை கொண்டதாகும். இறுதியாக, இது நீர் உட்பட எண்ணற்ற கரைப்பான்களில் கரையக்கூடியது. நைட்ரேட்டு மற்ற ஈந்தணைவிகளால் பதிலியிடப்படுவதன் மூலமாக, AgNO3 சேர்மத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஆலைடு அயனிகளைக் கொண்ட கரைசல்களுடனான வினை AgX (X = Cl, Br, I) வீழ்படிவினைத் தருகிறது. ஒளிப்படத் தகடுகளைத் தயாரிக்கும் போது முன்பு பாலிஎசுத்தர் அல்லது மூஅசிடேட்டு ஒளிப்படத்தகடுகளின் மீது ஜெலாட்டினுக்குப் பதிலாக வெள்ளி நைட்ரேட்டானது சோடியம் அல்லது பொட்டாசியம் ஆலைடுகளுன் வினைக்குட்பட்டு கரையாத வெள்ளி ஆலைடுகள் தயாரிக்கப்பட்டு பூசப்பட்டது. இதே போன்று, வெள்ளி நைட்ரேட்டானது வெள்ளி ஃப்ளூமினேட்டு, வெள்ளி அசைடு அல்லது வெள்ளி அசிட்டிலைடு போன்ற வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட வெடிமருந்துகளைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.
வெள்ளி நைட்ரேட்டைக் காரத்துடன் வினைப்படுத்தும் போது அடர் சாம்பல் நிற வெள்ளி ஆக்சைடு கிடைக்கப் பெறுகிறது:
2 AgNO3 + 2 NaOH → Ag2O + 2 NaNO3 + H2O
ஆலைடு கவர்தல்
வெள்ளி நேரயனி, Ag+ , ஆலைடு மூலங்களுடன் எளிதில் வினைபுரிந்து கரையாத வெள்ளி ஆலைடு வீழ்படிவினைத் தருகிறது. புரோமைடு பயன்படுத்தப்படும் போது ஒரு குழைமமாகவும், குளோரைடு அயனி பயன்படுத்தப்படும் போது வெண்ணிற வீழ்படிவையும் மற்றும் அயோடைடு அயனி பயன்படுத்தப்படும் போது மஞ்சள் நிற வீழப்படிவையும் தருகிறது. இந்த வினையானது கனிம வேதியியலில் ஆலைடுகளைக் கவர்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது:
இதே போன்று, இந்த வினையானது, பகுப்பாய்வு வேதியியலில் உப்புகளில் குளோரைடு, புரோமைடு அல்லது அயோடைடுஅயனிகளைக் கண்டறிவதற்கும் பயன்படுகிறது. உப்பின் மாதிரிகளுடன் நீர்த்த நைட்ரிக் அமிலமானது குறுக்கீடு செய்யும் அயனிகளை (உதாரணமாக, கார்பனேட்டு அயனிகள் மற்றும் சல்பைடு அயனிகள்) நீக்குவதற்காக சேர்க்கப்படுகிறது. இந்தப் படிநிலையானது வெள்ளி ஆலைடுகளுடன் வெள்ளி சல்பைடு அல்லது வெள்ளி கார்பனேட்டு ஆகியவை வீழ்படிவாகி குழப்பமேற்படுத்துவதைத் தவிர்க்கிறது. வீழ்படிவின் நிறமானது ஆலைடுகளுக்குத் தகுந்தவாறு மாறுகிறது. வெள்ளி குளோரைடு - வெண்ணிற வீழப்படிவு , வெள்ளி புரோமைடு - வெளிர் மஞ்சள் முதல் குழைமம் வரை, வெள்ளி அயோடைடு - மஞ்சள்.
மேற்கோள்கள்
↑ 1.01.11.21.31.41.51.6Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
↑ 4.04.14.24.3Meyer, P.; Rimsky, A.; Chevalier, R. (1978). "Structure du nitrate d'argent à pression et température ordinaires. Example de cristal parfait". Acta Crystallographica Section B34 (5): 1457–1462. doi:10.1107/S0567740878005907.