வைகை எக்ஸ்பிரஸ்
வைகை எக்ஸ்பிரஸ் (Vaigai Express) 2017இல் ஷாஜி கைலாஷ் இயக்கத்திலும், ஆர். கே. தயாரிப்பிலும் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் ஆர். கே மற்றும் நீத்து சந்திரா முக்கிய கதாபாத்திரத்திலும் இனியா (நடிகை) துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் "நதியா கொல்லப்பட்ட ராத்திரி" என்கிற மலையாள மொழிப் படத்தின் மறு ஆக்கமாகும். இது தமிழ்நாட்டில் மார்ச்சு 24, 2017இல் வெளியிடப்பட்டது.[1] நடிப்புஆர். கே. - ஷராபுதீன் ரஹ்மான் தயாரிப்பு2014இல் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர். கே. இயக்குநர் ஷாஜி கைலாஷிடம் தன் மூன்றாவது படத்திற்காக விருப்பம் தெரிவித்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே "எல்லாம் அவன் செயல்" (2008) மற்றும் "என் வழி தனி வழி" (2015) போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள். சென்னையிலுள்ள ஏவிஎம்மில், இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அறிவிப்பில், படத்தின் பெயர் "வைகை எக்ஸ்பிரஸ்" எனவும், தான் நடித்து, தயாரிக்கப் போவதாகவும் ஆர். கே. தெரிவித்தார். இப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்கள் இவ் விழாவில் அறிவிக்கப்பட்டன. தமன் இப் படத்திற்கு இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[2][3] 2015 பிப்ரவரியில், இத் திரைப்படத்தில் இரு வேடங்களில் நடித்த நீத்து சந்திராவிற்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டது.[4][5] இயக்குநர் ஆர். கே. செல்வமணி பிரதான எதிரியாக நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இப் படத்தின் வேலைகள் 2015ன் மத்தியில் முடிக்கப்பட்டு, 2017இல் வெளியிடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது. வெளியீடு"வைகை எக்ஸ்பிரஸ்" மார்ச்சு 24, 2017இல் தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை வழங்கியது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia