வல்லிபுரம் நல்லதம்பி நவரத்தினம் (V. N. Navaratnam, 5 சூன் 1929 - 29 சனவரி 1991) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.
1972 மே 14 இல் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தன.[13][14][15][16] தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் 1972 அக்டோபரில் தனது நாடாளுமன்ற இருக்கையைத் துறந்ததை அடுத்து நவரத்தினம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவரானார்.[1][2] தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நவரத்தினம் இருந்து செயல்பட்டார்.[17] 1976 மே 21 இல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த போது நவரத்தினம் ஏனைய தமிழ்த் தலைவரக்ளுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார்.[18][19] செல்வநாயகம், பொன்னம்பலம் உட்படப் பல முன்னணி வழக்கறிஞர்கள் இவர்களது வழக்கை நடத்தில் 1977 பெப்ரவரி 10 இல் விடுதலை பெற்றுக் கொடுத்தனர்[20][21]
1977 தேர்தலில் நவரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சாவகச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[22]தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[23].
பிற்காலம்
கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் புலம் பெயர்ந்து சிறிது காலம் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த நவரத்தினம், பின்னர் நிரந்தரமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். மூன்று நாடுகளிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவருக்கு சிறீ நமச்சிவாயா, சிறீ வல்லிபுரானந்தன், மைத்ரேயி, சிறீ சண்முகானந்தன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[1] 1991 சனவரி 29 இல் கனடாவில் மாரடைப்பினால் காலமானார்.[1][2][24]
↑"20 February 1961". Peace and Conflict Timeline. Archived from the original on 15 பிப்ரவரி 2015. Retrieved 16 பிப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
↑Rajasingham, K. T. "Chapter 23: Srimavo's constitutional promiscuity". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-02-13. Retrieved 2015-02-16.
↑Rajasingham, K. T. "Chapter 24: Tamil militancy - a manifestation". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2009-05-03. Retrieved 2015-02-16.