இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956
இலங்கையின் 3வது நாடாளுமன்றத் தேர்தல் 1956 ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. நீண்டகாலமாக இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தேர்தல் ஒரு பெரும் சவாலாகக் காணப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து இலங்கை சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார். பின்னணிஇலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஜோன் கொத்தலாவலை தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியிருந்தது. இதற்கிடையில், இலங்கை சுதந்திரக் கட்சி ஆங்கிலத்தை ஆட்சி மொழியில் இருந்து அகற்றி சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவதாக அறிவித்தது. இக்கோரிக்கையை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி பின்னர் 1956 இன் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டது. இதனால் அது சிறுபான்மை இலங்கைத் தமிழரின் செல்வாக்கை இழந்தது. திரொட்ஸ்கியவாதிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம், தமிழ் இரண்டும் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தன. தமிழ்க் கட்சிகள் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடர் வேண்டும் எனக் கேட்டனர். இசுக தலைவர் பண்டாரநாயக்கா ஒரு சில மாக்சியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து மகாஜன எக்சத் பெரமுன என்ற கூட்டமைப்பைத் தோற்றுவித்து அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார். முடிவுகள்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. பண்டாரநாயக்கா பிரதமர் ஆனார். 1956 ஏப்ரல் 12 இல் பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்றது.
இத்தேர்தலின் போது இலங்கை சுதந்திரக் கட்சியினரின் சிங்கள தேசியவாதப் பரப்புரைகள் சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது நிகழ்வாகக் கருதப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia