ஸ்ரீலட்சுமி கோவர்தனன்
ஸ்ரீலட்சுமி கோவர்தனன் [1][2] (Sreelakshmy Govardhanan), இந்தியாவைச் சேர்ந்த குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். இவர் குரு ஸ்ரீ பசுமார்த்தி ராதையக சர்மாவின் சீடர் ஆவார். இவரது நடன நிகழ்ச்சிகளின் போது , நடனத்தில் இவர் மேற்கொள்ளும் நேர்த்தியான அடிச்சுவடு, முக பாவனைகள் மற்றும் அபினயங்கள் (நடிப்பு நுட்பம்) ஆகியவற்றால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[3] சுயசரிதைஇளமைப்பருவம்குச்சிப்புடியில் நிபுணத்துவம் பெற்ற குரு ஸ்ரீ பசுமார்த்தி ராதையக சர்மா, ஸ்ரீமதி வைஜயந்தி காஷி மற்றும் ஸ்ரீமதி மஞ்சு பார்கவி போன்ற புகழ்பெற்ற குருக்களின் கீழ் இவர் பயிற்சி பெற்றுள்ளார். குச்சிபுடியின் வேர்களைத் தேடிய அரிய கலைஞர்களில் ஒருவரான ஸ்ரீலட்சுமி,[4] குச்சிபுடி யக்ஷகனாவை, ஸ்ரீ பசுமார்த்தி ராதையக சர்மா போன்ற கலைஞரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். கேரளாவிலிருந்து ஆந்திராவின் குச்சிபுடி கிராமத்திற்கு வந்து, பாரம்பரிய கலை வடிவத்தைக் கற்றுக் கொள்வதற்கும், தேர்ச்சி பெறுவதற்கும் நிறைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி தேவை. இவை அனைத்தையும் ஸ்ரீலட்சுமி இந்த கலையைக் கற்றுக் கொள்வதற்காக செய்துள்ளார். இவருக்கு இந்த கலை, இவரது இரண்டாவது தோல் போன்றது என்று குறிப்பிட்டுள்ளார். பாராட்டுகுச்சிபுடி நாட்டியத்தின் அழகை உயிர்ப்பிக்கும் திறனுக்காக ஸ்ரீலட்சுமி கோவர்தனன் [5] பரவலாக பாராட்டப்படுகிறார்.[6] இவர் "அபினயங்களின் சக்தியைப் பயன்படுத்திய நடனக் கலைஞர்" என்று விவரிக்கப்படுகிறார். விருதுகள் / அங்கீகாரம்ஸ்ரீலட்சுமி, பல விருதுகள் மற்றும் கௌரவ பட்டங்களைப் பெற்றுள்ளார். கேரள சங்கீத நாடக அகாதமி மாநில விருதான 'கலாஸ்ரீ' விருது, சென்னையிலுள்ள நாரத கான சபாவிலிருந்து பின்ஃபீல்ட் எண்டோமென்ட், பரதம் யுவ கலாக்கார், கலா ரத்னா, சிங்கர் மணி, நாட்டிய ரத்னா, நாளந்தா நிருத்ய நிபுணா போன்றவை குறிப்பிடத்தக்க சில விருதுகளாகும். ஸ்ரீலட்சுமி இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் 'நிறுவப்பட்ட' பிரிவில் ஒரு சிறந்த கலைஞர் மற்றும் தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞர் ஆவார். பல்வேறு மதிப்புமிக்க இந்திய நடன விழாக்களில் பங்களிப்பதைத் தவிர, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம், அமெரிக்கா, கொலம்பியா, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு சர்வதேச தளங்களில் இவர் நடன நிகழ்ச்சிகளை செய்துள்ளார். ஜெர்மனியில் 2015 ஆம் ஆண்டு ஹன்னூர் மெஸ்ஸில் நடைபெற்ற 'மேக் இன் இந்தியா' நிகழ்ச்சியில் குச்சிபுடி அணியின் தலைவராக இந்தியப் பிரதமர் முன்னிலையில் இவர் நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்த 'துபாயில் மர்ஹாபா நாமோ' தொடக்க நிகழ்ச்சிக்காக இந்திய நடனத்தின் சங்கமமாக நடனமாட அழைக்கப்பட்டார். பணிகள்இவர் சிந்தித்து பல நடன தொடர்பான பட்டறைகள் மற்றும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கப்பட்டு, 'ராசவிகல்பம்' வருடாந்திர நடனம் பணிமனை மற்றும் தேசிய நடனத் திருவிழா ஆகியவை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளராக இருந்தார் கேரளா சங்கீத நாடக அகாதமியில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். ஸ்ரீலட்சுமி, கற்றல், செயல்திறன் மற்றும் ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமான 'அவந்திகா ஸ்பேஸ் ஃபார் டான்ஸின்' நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார்.[7] திரைப்பட பங்களிப்புமலையாளத் திரைப்படமான 'கன்னியாகா டாக்கீஸ்' மற்றும் 'பிரியமனாசம்' ஆகியவற்றிற்கான நடன நகர்வுகளை இவர் செய்துள்ளார். ஸ்ரீலட்சுமி ஒரு பயிற்சி பெற்ற தொழில்முறை உளவியலாளர், நடனத்திலும் உளவியல் ஆலோசனையிலும் தனது திறமையைப் பயன்படுத்தி தனது கலையில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவருகிறார். மேலும் தேவைப்படும் இளம் மனங்களுக்கும் கற்றுத்தருகிறார்.[8] கல்வி தகுதி
குச்சிபுடியில் சொற்பொழிவு ஆர்ப்பாட்டங்கள்
குச்சிப்புடியில் பட்டறைகளை நடத்தியது
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia