100 (2019 திரைப்படம்)
100 என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இது சாம் ஆண்டன் இயக்கிய மூன்றாவது படமாகும். இப்படத்தில் அதர்வா, ஹன்சிகா மோட்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதாரவி, யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை மேற்கொள்ள, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் 2017 திசம்பரில் தொடங்கி 2018 ஆகத்துக்குள் படப்பிடிப்பு நிறைவடைந்தது.[1] இது 2019 மே 9 அன்று வெளியாகி பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்று, சராசரி வெற்றியைப் பெற்றது.[2] கதைச் சுருக்கம்காவலர் தேர்வில் தேவாகி காவல் தொலைபேசி கட்டுப்பாட்டறையில் பணிக்கு சேர்கிறார் சத்தியா (அதர்வா) அங்கு அவசர எண் 100க்கு வரும் தொலைபேசி அழைப்புகளைக் கையாள்வது அவருக்கான பணியாகும். ஒரு நாள் அவருக்கும் வரும் அழைப்பில் வரும் ஒரு பெண் தன்னை யாரோ கடத்தியுள்ளதாகவும் தன்னைக் காப்பாற்றவேண்டும் என்றும் உதவி கோருகிறாள். அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் சத்தியா ஈடுபடுகிறார். அப்போது இதே பேல வேறு பெண்களும் கடத்தப்பட்டிருப்பது சத்தியாவுக்கு தெரியவருகிறது. அந்தப் பெண்களை கடத்தியவர்கள் யார்? அவர்களை எப்படி சத்தியா கண்டுபிடிக்கிறார் என்பதே கதையின் பிற்பகுதியாகும். நடிகர்கள்
தயாரிப்புசாம் ஆண்டன் இயக்க அதர்வா நடிக்கும் ஒரு படத்தை தயாரிப்பதாக குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் 2017 சூனில் அறிவித்தார்.[3] இருப்பினும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தோல்வியானது அவரை நிதி நெருக்கடிக்கு தள்ளியது. இதன் பின்னர் அவர் இப்படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலிருந்து விலகினார். இதன்பின்னர் ஏற்பட்ட ஒரு திருப்பத்தில், தயாரிப்பு நிறுவனமான அவுரா சினிமாஸ் இந்த படத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. 2017 திசம்பரில் முன்னணி நடிகையாக நடிக்க ஹன்சிகா மோட்வானி ஒப்பந்தமானார்.[4] காவல் அதிகாரியாக முதன்முறையாக இப்படத்தின் வழியாக நடித்த அதர்வா இந்தப் பாத்திரத்திற்கான சண்டைப் பயிற்சி பெற்றார். இப்படத்தில் ராதாரவி, மைம் கோபி, யோகி பாபு, தமிழ் யூடியூப் பிரமுகர்களான எரும சாணி ஹரிஜா, எரும சாணி விஜய் ஆகியோரும் பணியாற்றினர்.[5] படத்தின் படப்பிடிப்பு 2018 சூலை மாதம் நிறைவடைந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்க வேண்டியுள்ளதாக படக் குழு அறிவித்தது.[6] இசைஇப்படத்திற்கான இசையை சாம் சி. எஸ். அமைத்தார் படத்தில் அனைத்து பாடல்களையும் மதன் கார்க்கி எழுதினார். படத்தின் இசை உரிமைகள் சரிகம நிறுவனத்துக்கு அளிக்கபட்டன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia