எத்தியோப்பியப் பேரரசைச் சேர்ந்த இருவர் காப்திக் மரபுவழித் திருச்சபை, இலத்தீன் திருச்சபை ஆகியவற்றின் சாத்தியமான ஒன்றியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக புளோரன்சில் இடம்பெற்ற ஒரு கிறித்தவ திருச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஐரோப்பாவுடனான காப்திக் திருச்சபையின் எத்தியோப்பியக் கிளையின் ஆரம்பகால பதிவு செய்யப்பட்ட தொடர்பு இதுவாகும்.
நவம்பர் 10 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின்வர்னா என்ற இடத்தில் துருக்கியர்களுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
1445
இந்த பகுதி 1445-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
அக்டோபர் 10 – மோக்ரா போர்: எசுக்காந்தர்பேகின் கீழ் அல்பேனியப் படையினர் உதுமானியப் படைகளை தோற்கடித்தனர், திருத்தந்தை நான்காம் யூசின் போரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, கிறித்தவ மண்டலத்திற்கு ஒரு புதிய பாதுகாவலர் கிடைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.[7]
கோமித் போர்: எத்தியோப்பியாவின் சாரா யாக்கோப் பேரரசர் அதல் சுல்தான்தஆர்வி பாட்லேயைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
இரண்டாம் விலாத் டிராகுல், பர்கண்டியில் இருந்து சிலுவைக் கடற்படையின் உதவியுடன், கியுர்கியூவைத் தாக்கி, அவர்கள் சரணடைந்த பிறகு உதுமானியப் படைகளைப் படுகொலை செய்தார்.
1446
இந்த பகுதி 1446-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
அக்டோபர் 9 – கொரியாவில்அங்குல் அகரவரிசை செசோங் மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டில் வெளியிடப்பட்ட அன்மின் சியோங்கியம், இந்த புத்தம் புதிய அறிவியல் எழுத்து முறையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.[8]
அக்டோபர் – உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத் அட்டிகா மீது படையெடுத்தார். பதினோராம் கான்சுடன்டைன் தீப்சு நகரை ஏதென்சிற்கு திருப்பிக் கொடுத்தார்.
திசம்பர் 10 – பல வாரங்கள் தயக்கத்திற்குப் பிறகு, உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத், பீரங்கிகளை உள்ளடக்கிய தாக்குதல் ஒன்றில் எக்சாமிலியன் சுவரை இடித்து அழித்தார். முராதும், தெசலியின் உதுமானிய ஆளுநரும் பெலொப்பொனேசியா மூவலந்தீவை நாசமாக்கினர். மோரியா உதுமானியாவின் அடிமை மாநிலமாக மாற்றப்பட்டது.[9]
↑'The colleges and halls: King's', in A History of the County of Cambridge and the Isle of Ely: Volume 3, the City and University of Cambridge, ed. J P C Roach (London, 1959), pp. 376-408. British History Online http://www.british-history.ac.uk/vch/cambs/vol3/pp376-408 [accessed 5 February 2021]
↑Jefferson, John (2012). The Holy Wars of King Wladislas and Sultan Murad: The Ottoman-Christian Conflict from 1438–1444. லைடன்: Brill Publishers. ISBN978-90-04-21904-5.
↑Bisson, T.N. (1991). The Medieval Crown of Aragon. Oxford University Press.