1947 பஞ்சாப்பில் இந்துக்கள், சீக்கியர்கள் மீது முசுலிம் லீக்கின் தாக்குதல் (நூல்)1947-இல் பஞ்சாப் பகுதியில் இந்து மற்றும் சீக்கியர்கள் மீதான முஸ்லீம் லீக்கின் தாக்குதல்கள் என்ற நூலை எழுதியவர் குருபச்சன் சிங் தாலிப் ஆவார். இந்நூல் 1950-ஆம் ஆண்டில், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவால் வெளியிடப்பட்டது.[1] இந்நூலில், இந்தியப் பிரிவினையின் போது, 1947-ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு புதிய சுதந்திர நாடுகள் உருவான போது, இந்து - சீக்கிய மக்கள் மீது, பாகிஸ்தான் நாட்டின் முஸ்லீம் லீக் அரசியல் கட்சியினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து விளக்குகிறது. பாகிஸ்தான் நாட்டின் மேற்கு பஞ்சாப், சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வாழ்ந்த சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்கும், பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து வாழ, முஸ்லீம் லீக் கட்சியினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், விடுதலை இந்தியாவை நோக்கி அகதிகளாக புறப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், தாக்குதல்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது நூல் குறித்தான விமர்சனங்கள்ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர், இஸ்தியாக் அகமது என்பவர் இந்நூலை ஆராய்ந்து, நடந்த சம்பவங்களை சரிபார்த்து அறிக்கையாக வழங்கியுள்ளார். [2] இதனையும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia