சிந்து (சிந்தி: سنڌ)பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இம்மாகாணத்தில் தலைநகரம் கராச்சி. பெருமளவில் சிந்தி மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்திலுள்ள மற்றொரு பெரிய நகரம் ஐதராபாத். 1947 லிருந்து 1955 வரை ஐதராபாத் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.
சிந்து என்ற பெயர் இம்மாகாணத்தின் நடுவில் பாயும் சிந்து ஆற்றால் வந்தது. பழங்கால ஈரானியர்கள் இம்மாகாணத்தை இந்து என அழைத்தனர். கிமு ஏழாம் நூற்றாண்டின் அசிரியர்கள் சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்து என்றும் கிரேக்கர்கள் சிந்தோசு பசுதூண்கள் அபாசிந்து என்றும் அரேபியர்கள் அல்-சிந்து என்றும் சீனர்கள் சிந்தோவ் என்றும் சாவாவாசிகள் சாந்திரி என்றும் அழைத்தனர்.