1992 தாமிரபரணி ஆற்று வெள்ளம்1992 தாமிரபரணி ஆற்று வெள்ளம் என்பது 1992 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைக் குறிக்கிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக விக்கிரமசிங்கபுரத்தில் 17 பேர் உயிரிழந்தனர்[1][2]. வெள்ளத்திற்கான காரணங்கள்பாபநாசம் அணைப் பகுதியில் 310 மிமீ மழை பெய்தது. சேர்வலார் அணைப் பகுதியில் 210 மிமீ மழை பதிவாகியது. இதன் காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை ஆகிய இரண்டு பெரிய அணைகள் நிரம்பின. பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மிமீ மழை பதிவாகியது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 321 மிமீ மழை ஒரே நாளில் பதிவாகியது. மணிமுத்தாறு அணைப் பகுதியில் 260.8 மிமீ மழை பதிவாகியது. திருநெல்வேலியில் சூறாவளியின் காரணமாக எட்டு மணி நேரம் தொடர் மழை பெய்தது.[1] நீர் வெளியேற்றம்அணைகள் நிரம்பியதன் காரணமாக அதிகாரிகள் நவம்பர் 13 அன்று இரவு பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை மதகுகளைத் திறந்தனர். இரண்டு பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் முண்டந்துறை ஆற்றுப் பாலத்தை சில நிமிடங்களில் அடைந்தது. பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து 60 நிமிடத்திற்குள் மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அந்த நாளில் மூன்று அணைகளில் இருந்து விநாடிக்கு 2,04,273.8 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பாதிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia