1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள்
1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் சனிக்கிழமை 1998, பெப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் இடம்பெற்றன. 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இத்தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். மேலும் 2,000 பேர் காயமடைந்தனர். 11 வெவ்வேறு இடங்களில் 12 கி.மீ. சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடிக்கப்பட்டன. 4 குண்டுகள் ஆர். எஸ். புரம் என்ற இடத்திலும், இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும், மற்றொன்று "உக்கடம்" பகுதியிலும் வெடித்தன. பாஜக தலைவர் எல். கே. அத்வானி உரையாற்றவிருந்த இடத்துக்கு 100 மீ. தூரத்திலேயே முதலாவது குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்புகளுக்கு அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது[4]. இவ்வழக்கு தொடர்புடைய என்.பி. நூக் எனும் மன்கவு ரசீத் என்பவர் 20 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதுங்கியிருந்தார். இவர் தமிழ்நாடு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் 11 செப்டம்பர் 2018 அன்று கோழிக்கோட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.[5] பின்விளைவுபிப்ரவரி 15 அன்று காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சந்தேகத்திற்குரிய அல்-உம்மாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் திருமால் தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், பிப்ரவரி 17 அன்று அல்-அமீன் காலனியில் கவனிப்பார் இன்றி இருந்த குண்டு வெடித்ததில் விளையாடிக்கொண்டிருந்த 4 இஸ்லாமிய சிறுவர்கள் இறந்தார்கள். இக்குண்டுத் தாக்குதல்களை அடுத்து சில நாட்களில் இசுலாமியத் தீவிரவாத அமைப்பான அல் உம்மா தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டுஇக்குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி எனக்கருதப்படும் எஸ். ஏ. பாஷா உட்பட 35 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்[4]. தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கின் தீர்ப்புகோவை தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கு தொடர்பாக 7 மார்ச் 2002 அன்று நீதிமன்றத்தில் விசாரணை துவங்கப்பட்டது. அதில் 1,300 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். 10 ஏப்ரல் 2007 அன்று நீதிமன்ற விசாரணை முடிவுற்றது. 1 ஆகஸ்டு 2007 அன்று அப்துல் நாசர் மதானி கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[6] 24 அக்டோபர் 2007 அன்று தீர்ப்பு வெளியானது. தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 35 நபர்களில் 21 பேரை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது மற்றும் அல் உம்மாவைச் சேர்ந்த எஸ் ஏ. பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்ட 13 நபர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.[7] 17 நவம்பர் 2009 அன்று, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் சிறைவாசத்தில் இருந்த அல் உம்மாவின் பக்ருத்தீன் உள்ளிட்ட 9 சிறைக்கைதிகளை தமிழ்நாடு அரசு விடுவித்தது..[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia