2003 மும்பை குண்டுவெடிப்புகள்

2003 மும்பை இரட்டை குண்டுவெடிப்புகள்
இடம்மும்பை, இந்தியா
நாள்25 ஆகஸ்டு 2003
தாக்குதல்
வகை
கார் குண்டு வெடிப்புகள்
இறப்பு(கள்)52
காயமடைந்தோர்300
தாக்கியோர்லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதிகளான முகமது அனீப் சையது, அவன் மனைவி பமீதா சையது மற்றும் அஸ்ரப் அன்சாரி

2003 மும்பை கார் குண்டுவெடிப்புகள் (25 ஆகஸ்டு 2003 Mumbai bombings), இந்தியாவின் மும்பை பெருநகரத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தியாவின் நுழைவாயில் மற்றும் சாவேரி பஜார் எனும் நகைக்கடைகள் நிறைந்த பகுதிகளில் 25 ஆகத்து 2023 அன்று பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதிகளான முகமது அனீப் சையது, அவன் மனைவி பமீதா சையது மற்றும் அஸ்ரப் அன்சாரி ஆகியோர் நடத்திய இரட்டை கார் குண்டி வெடிப்புகளாகும். இக்குண்டு வெடிப்புகளில் 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 244 பேர் படுகாயமடைந்தனர்.[1][2]

31 ஆகத்து 2003 அன்று குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் சந்தேகிக்கப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதிகளான முகமது அனீப் சையது, அவன் மனைவி பமீதா சையது மற்றும் அஸ்ரப் அன்சாரி ஆகியோரை காவல்துறை பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பொடா சிறப்பு நீதிமன்றம் மேற்படி மூன்று திவீரவாதிகளுக்கு, ஆகஸ்டு 2009ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.[3][4]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya