2009 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
Pakistan in Sri Lanka in 2009
பாக்கிஸ்தான்
இலங்கை
காலம்
சூன் 29 2009 – ஆகஸ்டு 12 2009
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
இருபது20 தொடர்
2009 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்2009ஜூன் 29 தொடக்கம் ஆகஸ்டு 12 வரை நடைபெறவுள்ளது. இச்சுற்றுப் பயணத்தின் போது 3 பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளும் 5 பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளும் ஒரு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்கு மேலதிகமாக பாக்கிஸ்தான் அணி முன்னோட்டப் போட்டிகளாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டியிலும் ஒரு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றும்.[1][2]
தேர்வுத்துடுப்பாட்டத்திற்கான குழுக்கள்
பாக்கிஸ்தான்
பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் பாக்கிஸ்தான் தேர்வுத்துடுப்பாட்ட அணி தேர்வுத்துடுப்பாட்ட அணியை தெரிவுச் செய்யும் 15 பேர் குழுவை அறிவித்தது. ஐசிஎல் போட்டிகளில் விளையாடிமைக்காக நீக்கப்பட்டிருந்த முகமது யூசுப் ஐசிஎல் போட்டிகளில் விளையாட தான் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.[3]
இலங்கை துடுப்பாட்ட வாரியம் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பதினைவர் குழுவை அறிவித்தது. இதன்படி இல்ஙகையின் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாசுக்கு பதிலாக 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் திறமையாக விளையாடிய அஞ்சலோ மெத்திஸ் தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். குச்சக்காப்பளராக கௌசால் சில்வாவும் இன்னொரு வேகப்பந்துவீச்சளராக சுரங்க லக்மாலும் இம்முறை புதிதாக இலங்கையின் தேர்வுத்துடுப்பாட்ட அணியை தெரிவுச் செய்யும் பதினைவர் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.[4]