2011 சிக்கிம் நிலநடுக்கம் ஞாயிறு, செப்டம்பர் 182011 அன்று உள்ளூர் நேரம் மாலை 18.10க்கு (12:40 UTC) சிக்கிம்-நேபாள எல்லை அருகில் கஞ்சன்சங்கா மலைப் பகுதியை மையமாகக் கொண்டு உந்தத்திறன் ஒப்பளவு 6.9 அளவிலான சேதம் விளைவித்த நிலநடுக்கமாகும்.[3] இந்த நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா முழுமையும், நேபாளம், பூடான், வங்காளதேசம் மற்றும் தெற்கு திபெத்தில் உணரப்பட்டது. அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் உணரப்பட்ட 4.2 அளவிலான நிலநடுக்கத்திற்கு சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.[4] தவிர, 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த நான்காவது நிலநடுக்கமாகும்.[5]
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 18 பேராவது கொல்லப்பட்டனர்[6]. சிக்கிமில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.[7][8]காங்டாக்கில் பல கட்டிடங்கள் இடிந்தன.[9]நேபாளத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; இவர்களில் காட்மாண்டூவில் பிரித்தானிய தூதரகத்தின் சுற்றுச்சுவர் இடிந்த விழுந்ததில் இறந்த மூவரும் அடக்கம்.[10]