2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. பல்வேறு துறைகளில் இவ்வரசின் நிர்வாக செயற்பாடுகள் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன. வெளியுறவுக் கொள்கைஇராணுவம்
பொருளாதாரம்சட்டம் ஒழுங்குஉத்திரப் பிரதேசம்
தொடர்வண்டிப் போக்குவரத்துஅமைச்சர்கள்
கட்டண உயர்வு (சூன் 20, 2014)
தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்டம் (2014 - 2015)சூலை 8 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[7]. இது அமைச்சர் சதானந்த கௌடாவின் முதலாவது தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையாகும்[8]. முக்கிய அம்சங்கள்[9]:
நீர்வள மேலாண்மைநீர்வள அமைச்சகம் என அழைக்கப்பட்டுவந்த அமைச்சகம், நீர்வளம், ஆறுகள் வளராக்கம் மற்றும் கங்கை புத்துயிர்ப்பு அமைச்சகம் எனும் புதிய பெயரினைப் பெற்றது[10]. ஆற்றுநீர் வளத்தைப் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையில் இந்த அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைஉச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பார்வைக் குழுவினை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சூன் 18, 2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[11]. நாடாளுமன்ற செயற்பாடுகள்முதல் கூட்டத் தொடர்
வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் (2014)சூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. சூலை 10 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[18]. சூலை 7 அன்று விலைவாசி உயர்வு, தொடர்வண்டி கட்டணம் உயர்வு போன்றவை தொடர்பாக மக்களவையில் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.[19]. சூலை 8 அன்று தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சூலை 9 அன்று 2013-14ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்[20][21]. சூலை 10 அன்று 2014-15ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia