2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம் 2015 அக்டோபர் 26 அன்று ஆப்கானித்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைக் குறிக்கும். இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 360 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3].
அக்டோபர் 26, 2015 அன்று 14:45 (09:09 ஒபநே) 7.5 அளவிலான நிலநடுக்கம் தெற்காசியாவில்,[4]இந்து குஷ் பகுதியில்[5] ஆப்கானித்தானின் அலகாதரி-யெ கிரண் வா முஞ்சனுக்கு வடக்கே 45கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.[6] நிகழ்நேரத் தகவல்களின்படி 180 பேர் உயிரிழந்துள்ளனர்;இவர்களில் 147 பேர் பாக்கித்தானிலும் 33 பேர் ஆப்கானித்தானிலும் உயிரிழந்துள்ளனர்.[7] ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான் நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.[8][9][10][11] இந்திய நகரங்களான புது தில்லி, சிறிநகரிலும்சீனாவின்சிஞ்சியாங் பகுதியில் உள்ள கஷ்கர், அக்சூ, ஹோதன் நகர்களிலும் உணரப்பட்டன.[12]
பாக்கித்தானிய தினசரி தி நேசன் இந்த நிலநடுக்கம் 210 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட பாக்கித்தானின் மிகப்பெரிய நிலநடுக்கமாக அறிவித்துள்ளது.[13]
பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபரில் 2005இல் காசுமீரில் இதே பகுதியில் இதேயளவில் (7.6 Mw)ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87,351 உயிரிழப்புகளும், 75,266 காயங்களும், 2.8 மில்லியன் இடப்பெயர்வுகளும் 250,000 கால்நடை இழப்புகளும் ஏற்பட்டன. இவை இரண்டுக்குமுள்ள முதன்மை வேறுபாடு நிகழ்வு ஏற்பட்ட ஆழத்திலாகும்; 2005 நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்திலும் தற்போதைய நிலநடுக்கம் 212.5 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டுள்ளன.