2015 சிங்கப்பூர் பொதுத் தேர்தல்
சிங்கப்பூரின் 17வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் (Singapore's 17th parliamentary general election) 2015 செப்டம்பர் 11 இல் நடைபெற்றது.[1] சிங்கப்பூரின் யாப்பின் படி, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் அதிகபட்சக் கால எல்லை 5 ஆண்டுகள் ஆகும். இக்காலப்பகுதிக்குள் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.[2] சிங்கப்பூரில் வாக்களிப்பது கட்டாயம் ஆகும். பிரதமர் அலுவலகத்தின் கீழுள்ள தேர்தல் வாரியத்தினால் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 2015 ஆகத்து 25 இல் குடியரசுத் தலைவர் டோனி டேன் கெங் யம் 16வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 2015 செப்டம்பரில் நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சிங்கப்பூரின் விடுதலைக்குப் பின்னர் முதற் தடவையாக இத்தேர்தலிலேயே அனைத்து 83 தொகுதிகளிலும் தேர்தல் இடம்பெற்றது.[3] பெரும்பாலான தொகுதிகளில் முக்கிய இரண்டு கட்சிகளே போட்டியிட்டன. மூன்று தனித் தொகுதிகளில் மூன்று கட்சிகள் போட்டியிட்டன.[4] மொத்தமுள்ள 89 தொகுதிகளில், மக்கள் செயல் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 83 இடங்களை வென்றது. மீதமுள்ள 6 இடங்களை 28 தொகுதிகளில் போட்டியிட்ட சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி வென்றது.[3] மொத்தம் 93.56% வாக்குகள் (வெளிநாட்டு வாக்குகள் தவிர்த்து) பதியப்பட்டன.[5] செயல் கட்சி 69.86% வாக்குகளைப் பெற்றது. இது 2011 தேர்தல் வாக்குகளை விட 9.72% அதிகமாகும். பாட்டாளிக் கட்சி 39.75% வாக்குகளைப் பெற்றது. இது சென்ற தேர்தலை விட 6.83% குறைவானதாகும்.[4][6] பின்னணிஇத்தேர்தல் சிங்கப்பூரின் 17வது பொதுத்தேர்தலும், சுதந்திரத்திற்குப் பின் நடக்கும் 12வது பொதுத்தேர்தலும் ஆகும். 1959 முதல் தொடர்ந்து 14 முறை ஆட்சியில் உள்ள மக்கள் செயல் கட்சி (PAP) இத்தேர்தலில் போட்டியிடுகிறது. சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மறைவிற்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தலும், பிஏபி பொதுச் செயலாளர் லீ சியன் லூங்கின் தலைமையிலான மூன்றாவது தேர்தலுமாகும். அரசியல் கட்சிகள்1965இல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சியில் உள்ளது, பிரதமராக லீ சியன் லூங் பதவியில் உள்ளார். லோ தியா கியாங் தலைமையிலான தொழிலாளர் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. அக்கட்சிக்கு தற்போது 7 உறுப்பினர்களும் இரண்டு தொகுதியல்லாத உறுப்பினர்களும் உள்ளனர். சியா சீ தோங் தலைமையிலான சிங்கப்பூர் மக்கள் கட்சிக்கு தொகுதியல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் (NCMP) ஒருவர் உள்ளார். எட்டு எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் களத்தில் இறங்கின.
காலக்கோடு
தேர்தல் முடிவுகள்வாக்குகள் மசெக (69.86%) WP (12.48%) SDP (3.76%) NSP (3.53%) RP (2.63%) SingFirst (2.25%) SPP (2.17%) SDA (2.06%) PPP (1.13%) சுயேட்சை (0.12%)
![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia