2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஏதிலிகள் ஒலிம்பிக் அணி
ஏதிலிகள் ஒலிம்பிக் அணி (Refugee Olympic Team) ஆகத்து 5 முதல் ஆகத்து 21 வரை பிரேசிலின் இரியோ டி செனீரோவில் நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி போன்ற உலகளவில் ஏதிலிகள் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இரியோ ஒலிம்பிக்கில் ஐந்து முதல் பத்து வரையில் ஏதிலிகள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமசு பாக் மார்ச் 2016இல் அறிவித்தார்.[2] The team was led by Loroupe.[3] இந்த மெய்வல்லுநர்கள் ஒலிம்பிக் சின்னங்களின் கீழ் போட்டியிட்டனர். துவக்கத்தில், இவர்கள் "ஏதிலி ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணி" (Team of Refugee Olympic Athletes) எனப் பெயரிடப்பட்டு ப.ஒ.கு நாட்டுக்குறியாக ROA வழங்கப்பட்டது,[4] ஆனால் பின்னர் இது ஏதிலிகள் ஒலிம்பிக் அணி என மாற்றப்பட்டு நாட்டுக்குறியாக ROT வழங்கப்பட்டது.[5][6] "உலகின் ஏதிலிகளுக்கு ஆதரவைக் காட்டுமுகமாக" உருவான இந்த முயற்சிக்கு[7] 2016 தீச்சுடர் தொடரோட்டத்தின் அங்கமாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இப்ராகிம் அல்-உசேன் என்ற சிரிய ஏதிலியை ஒலிம்பிக் தீச்சுடரை ஏதென்சிலிருந்த எலியோனாசு ஏதிலி முகாம் வழியே ஏந்திச் செல்ல தேர்ந்தெடுத்தது.[8] தவிரவும், குவைத்தின் தேசிய ஒலிம்பிக் குழு இடைநீக்கம் செய்யப்பட்டதால் அந்நாட்டு மெய்வல்லுநர்களும் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுகின்றனர். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia