2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், (2016 Summer Olympics), அலுவல்முறையில் 31வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXXI Olympiad) அல்லது ரியோ டி செனேரோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகத்து 5, 2016 முதல் ஆகத்து 21, 2016 வரை பிரேசிலின் இரியோ டி செனீரோ மாநகரத்தில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும்.[2] 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களும் இதே நகரத்தில் இதே குழுவின் மேற்பார்வையில் செப்டம்பர் 7 முதல் 18 வரை நடைபெற உள்ளன. அக்டோபர் 2, 2009 இல் கோபனாவன், டென்மார்க்கில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 121ஆவது அமர்வில் போட்டிகளை நடத்தும் நகரமாக இரியோ டி செனீரோ அறிவிக்கப்பட்டது. பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் போட்டியிடப்படும் விளையாட்டுக்களின் எண்ணிக்கையிலும் இந்த ஒலிம்பிக்சு சாதனை நிகழ்த்தியுள்ளது. 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் 10,500க்கும் கூடுதலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்; முதன்முறையாக கொசோவோவும் தெற்கு சூடானும் பங்கேற்றன.[3] 28 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மொத்தம் 306 பதக்க கணங்கள் வழங்கப்பட்டன; 2009இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு சேர்த்த எழுவர் ரக்பி, குழிப்பந்தாட்டம் போட்டிகளும் இதில் அடங்கும். நடத்தப்படும் நகரத்தின் 33 நிகழிடங்களிலும், சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், சவ்வாதோர், பிரசிலியா, மனௌசு நகரங்களில் ஒவ்வொரு இடத்திலும் போட்டிகள் நடந்தன. வரலாற்றுச் சிறப்புகள்
இந்திய அணியின் பங்கேற்புஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா ஆகியோர் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.[5] விளையாட்டுக்கள்துவக்க விழாதுவக்கவிழா ஆகத்து 5, 2016 அன்று மரக்கானா விளையாட்டரங்கத்தில் இரவு 8 மணிக்குத் துவங்கி நடந்தது. விளையாட்டுப் போட்டிகள்2016 கோடை ஒலிம்பிக்கில் 28 விளையாட்டுக்களில் 41 பிரிவுகளில் 306 நிகழ்வுகள் நடைபெற்றன.
காற்பந்தாட்டம்இரியோ டி செனீரோவின் மரக்கானா அரங்கை விட சில காற்பந்தாட்டப் போட்டிகள் சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், சவ்வாதோர், பிரசிலியா, மனௌசு ஆகிய நகரங்களில் உள்ள ஐந்து அரங்குகளில் நடைபெற்றன. பங்கேற்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள்![]() அனைத்து 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களிலிருந்தும் குறைந்தது ஒரு விளையாட்டு வீரராவது போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். இந்தப் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்ற முதல் மூன்று நாடுகளாக செருமனி, பெரிய பிரித்தானியா, நெதர்லாந்து இருந்தன. 2014ஆம் ஆண்டு உலக குதிரையேற்ற விளையாட்டுக்களில் வென்றதால் குதிரேயேற்ற நடைப்பயிற்சியில் இந்த நாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் நான்கு விளையாட்டாளர்கள் தகுநிலைக்கு எட்டினர்.[6] தெற்கு சூடான், கொசோவோ ஆகிய நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கெடுத்தன. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்ட அகதிகள் பிரச்சனை காரணமாகவும் மற்ற நாடுகள் எதிர்கொள்ளும் அகதிகள் பிரச்சனை காரணமாகவும் பத்து பேர் கொண்ட அகதிகள் ஒலிம்பிக் அணி உருவாக்கப்பட்டு பங்குகொண்டது.[7] இந்த அணி ஒலிம்பிக் கொடியின் கீழ் அணிவகுப்பில் கலந்துகொண்டது. குவைத் அரசு அந்நாட்டு ஒலிம்பிக் ஆணையத்தில் தலையிடுவதாக கூறி ஐந்து ஆண்டுகளில் இரண்டாம் முறையாக குவைத் 2015 அக்டோபர் மாதம் ஒலிம்பிக்கில் பங்கேற்பது தடை செய்யப்பட்டது.[8] இது முதன்முறை 2010இல் தடைசெய்யப்பட்டது அத்தடை 2012இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சி நிரல்மார்ச் 31, 2015இல் நுழைவுச் சீட்டுக்கள் விற்பனைத் துவக்கத்தின் போது வெளியான நிகழ்ச்சி நிரலை ஒட்டி உருவாக்கப்பட்டது.[9]
சின்னம்2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான அலுவல்முறையான சின்னத்தை பிரேசிலிய விளம்பரவடிவமைப்பு முகமை தாதில் வடிவமைப்பு வடிவமைத்து திசம்பர் 31, 2010இல் 139 போட்டியிட்ட நிறுவனங்களை எதிர்த்து வெற்றியடைந்தது.[10] இந்தச் சின்னத்தில் மூவரின் கால்களும் கைகளும் இணைந்தும் மொத்தமாக பிரேசிலின் சர்க்கரைக்கட்டி மலையை ஒத்தும் அமைந்துள்ளது. தவிரவும் இது முப்பரிமாணத்தில் உள்ளது; இதை வடிவமைத்த பிரெட் கெல்லி "ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முப்பரிமாண சின்னம் இதுவே" எனக் கூறியுள்ளார்.[11] ![]() நற்பேறு சின்னங்கள்பிரேசிலிய பாடலாசிரியர் வினிசியசு டி மோரேசை நினைவுறுத்தி கோடை ஒலிம்பிக்கின் சின்னம், வினிசியசு என்ற பெயரிடப்பட்டுள்ளது. வினிசியசின் வடிவம் பிரேசிலிய காட்டுயிரை எதிரொளிக்கின்றது; "பூனைகளின் விரைவியக்கம், குரங்குகளின் அசைவாட்டம், பறவைகளின் நளினத்தை" இணைக்கின்றது.[12] இந்த கதாபாத்திரத்தின் கைகளையும் கால்களையும் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நீட்டலாம்.[12] இசைக்கலைஞர் டாம் சோபிமை நினைவுறுத்தி மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கின் சின்னம், டாம் பெயரிடப்பட்டுள்ளது. டாமின் வடிவமைப்பு பிரேசிலியக் காடுகளில் உள்ளத் தாவரங்களை எதிரொளிக்கின்றது; டாமின் தலையிலுள்ள இலைகளிலிருந்து எந்தப் பொருளையும் வெளியிழுக்கலாம்.[13] நிறைவு விழாநிறைவு விழா மரக்கானா விளையாட்டரங்கத்தில் ஆகத்து 21, 2016 அன்று நடைபெற்றது. சாதனைகள்2016 இரியோ ஒலிம்பிக்கில் பல்வேறு போட்டிகளில் 27 உலக சாதனைகளும் 91 ஒலிம்பிக் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. பதக்கங்கள்IOA - ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்ட தனி நபர். இது அகதிகள் குழு\அணி அல்ல. அகதிகள் அணியும் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டது. குவைத்தின் பாகித்-அல்-திகானி துப்பாக்கி சுடும் போட்டியில் (இரு டிராப்) தங்கம் வென்றார்.
நடத்தும் நாடு (பிரேசில்) மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் 2016 கோடைக்கால ஒலிம்பிக்சு என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia