2016 கோடைக்கால ஒலிம்பிக் நிறைவு விழா
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நிறைவு விழா இரியோ டி செனீரோவின் மரக்கானா விளையாட்டரங்கத்தில் ஆகத்து 21, 2016, ஞாயிறன்று இரவு 20:00க்கு பி.நே.வ (ஒ.ச.நே - 03:00) துவங்கும்.[1] 78,000-இருக்கை கொண்ட விளையாட்டரங்கம் முழுமையும் நிரம்பி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒலிம்பிக் பட்டயத்தில் வரையறுத்துள்ளபடி நிறைவுப் பேச்சுக்கள், கொடியேற்றங்கள், நாடுகளின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீச்சுடரை அணைத்தல் போன்ற முறைசார் சடங்குகளுடன் கலைநிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும். நிறைவு விழாவில் ஒலிம்பிக்கின் தாயகமான கிரேக்கம், 2016 நடத்திய பிரேசில் மற்றும் 2020 ஒலிம்பிக்கை நடத்தப் போகும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நாட்டுப் பண் இசைக்கப்படும். ![]() ![]() இந்த நிறைவு விழாவிற்கான புத்தாக்க இயக்குநராக ரோசா மாகலேசு உள்ளார். இந்த விழா இரியோவின் சாலை கார்னிவாலை குவியப்படுத்தி இருக்கும்.[2] இதில் நோர்வேயின் மின்பருவ இசை அமைப்பாளர் கைஃகோ நிகழ்ச்சியும் இடம் பெறும். இது புதியதாகத் தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் தொலைக்காட்சி அலைவரிசையின் துவக்க விழாவாக அமையும்.[3] பிரேசிலின் காற்பந்தாட்டக்காரர் பெலே துவக்கவிழாவிற்கு வரவியலாது போனதால் நிறைவு விழாவில் பங்கேற்கப் போவதாக தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.[4] 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்வைப்பு காட்சியளிப்பை ரிங்கோ ஷீனா வடிவமைக்கவிருக்கிறார். [5] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia