2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2020 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2020 Summer Olympics, 2020年夏季オリンピック), அலுவல் முறையில் 32வது ஒலிம்பியாட் விளையாட்டுகள் (Games of the XXXII Olympiad), தோக்கியோ 2020 (Tokyo 2020)|東京2020}}, என்பது சப்பான், தோக்கியோவில் 2021 சூலை 23 முதல் ஆகத்து 8 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகள் முதலில் 2020 சூலையில் நடத்தப்படவிருந்தது, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது தள்ளிப்போடப்பட்டு, பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றன. 2021 இல் இப்போட்டிகள் நடைபெற்றாலும், இந்நிகழ்வு சந்தைப்படுத்தல், மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தோக்கியோ 2020 என்றே அழைக்கப்பட்டது.[2] ஒலிம்பிக் போட்டியொன்று தள்ளிப்போடப்பட்டது ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.[3] மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆகத்து 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறுகின்றன.[4] 2013 செப்டம்பர் 7 இல் அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் நடைபெற்ற 125-வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் 2020 போட்டிகளை நடத்தும் நாடாக தோக்கியோ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[5] தோக்கியோ இரண்டாவது தடவையாக கோடைக்காலப் போட்டிகளை நடத்தியது. முன்னதாக 1964 போட்டிகள் தோக்கியோவில் நடைபெற்றன. ஆசியாவில் இரண்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய நாடாக தோக்கியோ விளங்குகிறது. மொத்தமாக சப்பான் நான்காவது தடவையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. சப்போரோ, நகானோ ஆகிய நகரங்களில் குளிர்காலப் போட்டிகள் முறையே 1972, 1998 ஆம் ஆண்டுகளில் நடந்தன. சப்பான் 1940 கோடைகாலப் போட்டிகளை நடத்தத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், 1938 இல் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகிக்கொண்டது. விளையாட்டுகள்விளையாட்டுப் போட்டிகள்2020 கோடை ஒலிம்பிக்கில் 33 விளையாட்டுகளில் 50 பிரிவுகளில் 339 நிகழ்வுகள் நடைபெற்றன.
பங்கேற்கும் நாடுகள்205 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவிக் அகதிகள் ஒலிம்பிக் அணி போட்டிகளில் பங்கேற்றது. ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பங்கேற்ற நபர்கள் விபரம். பதக்கப் பட்டியல்* போட்டி நடத்தும் நாடு
இந்தியா வென்ற பதக்கங்கள்2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள மற்றும் வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.[7]
இதனையும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் தோக்கியோ 2020 என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia