2017 ஈரான்–ஈராக் நிலநடுக்கம்
2017 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் சர்வதேச திட்ட நேரம் 18:18 (21:48 ஈரான் திட்ட நேரம், 21:18 அரேபிய திட்ட நேரம்), இன் போது உந்தத்திறன் ஒப்பளவு 7.3 அளவிலான நிலநடுக்கம் நிகழ்ந்தது. ஈரான்-ஈராக் எல்லைப்புறத்தில் ஈரானின் எல்லையோர ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியில் உள்ள கெர்மான்சா மாகாணத்தில்[4][8] அலாப்ஜா நகரிலிருந்து 32 கிலோமீட்டர் அல்லது 20 மைல் தொலைவில் நிலநடுக்க மையத்தைக் கொண்ட நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதுமாகவும் அதற்கப்பாலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 452 எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். 8,100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்னும் பல பேர் இருக்கும் இடம் அறியப்படாமலும் உள்ளது.[9] தற்போதைக்கு 2017 ஆம் ஆண்டில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்க நிகழ்வு இதுவேயாகும்.[10] நிலநடுக்கம்![]() இந்த நில நடுக்கமானது ஈரானிய-ஈராக்கிய எல்லைப் புறத்தில் நிகழ்ந்துள்ளது.[1][3][5][11] இந்த நிலநடுக்கமானது பகுதாதுவுக்கு வடகிழக்காக தோராயமாக 220 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளது [1][3][11] இந்த நிலநடுக்கம் அரேபியக் கடல் குவிவு பகுதி மற்றும் யுரேசிய கண்டத்திட்டுகள் சந்திக்கும் பகுதியில் ஏற்பட்டதாகும். ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் மதிப்பீட்டின்படி இந்த நில நடுக்கத்தின் உந்தத்திறன் ஒப்பளவானது 7.3 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் நிலவியல் அமுக்க விசையின் காரணமாக பாறையடுக்குகளின் இடையே ஏற்பட்ட அமுக்குவிசையால் புவியோட்டில் ஏற்பட்ட முறிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.[12] தற்போதைய நிலநடுக்கமானது, 1967 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 6.1 உந்தத்திறன் ஒப்பீட்டளவு நிலநடுக்கத்திற்குப் பிறகான இப்பகுதியின் மிக வலிமையான நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கமானது மத்திய கிழக்கு நாடுகளிலும் மற்றும் இன்னும் தொலைவிலுள்ள இசுரேல், அரேபிய தீபகற்பம் மற்றும் துருக்கி போன்ற தொலைதுாரப்பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.[13][14][15][16] ஈரானிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் நிகழ்ந்த நேரத்திலிருந்து சில மணி நேரங்களுக்குள் குறைந்தபட்சம் 50 நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.[17] நிலநடுக்கத்தின் பின்விளைவுகள்விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் விவரம்கெர்மான்சா மாகாணமானது அலபஜா மற்றும் சார்போல்-இ சகாப் ஆகிய நகரங்களின் கடுமையான பாதிப்புகளுடன் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.[18][19] எஸ்கெலெ என்பது நிலநடுக்க மையத்திற்கு அருகாமையில் உள்ள நகரமாகும்.[20] ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் சார்ந்த மரணங்களில் பெரும்பாலானவை சார்போல்-இ-சகாப் நகரம் மற்றும் எஸ்கெலெ மாவட்டத்திற்கும் உரியதாகும். இந்தப் பகுதிகள் ஒட்டுமொத்தமாக முப்பதாயிரத்திற்கும் (30,000) மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டவையாகும்.[21] கெர்மான்சா மற்றும் இலம் மாகாணங்களில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.[22] குறைந்தபட்சம் 510 நபர்கள் இறந்திருக்கக்கூடும் எனவும், ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[13][23] சார்போல்-இ-சகாப் நகரில் மருத்துவமனை ஒன்று சேதமடைந்து குறைந்தது 142 பேர் இறந்துள்ளனர். முன்னாள் அதிபர் மகுமூத் அகமதிநெச்சாத்தால் கட்டி வழங்கப்பட்ட சமூகக் குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களில் பலர் இறந்துள்ளனர்.[7][16][17] நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகாமையில் உள்ள ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியில் குறைந்தபட்சம் 7 நபர்கள் இறந்திருக்கலாம் எனவும் ஐநுாறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.[22][24] நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட மேலோட்டமான ஆழங்களில் ஏற்பட்ட பள்ளங்களின் காரணமாக ஏற்படும் நிலச்சரிவுகள் மேலும் சேதமேற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளவையாகக் கருதப்படுகின்றன.[25] இந்த நிலநடுக்கம் 14 ஈரானிய மாகாணங்களில் வசிக்கும் 70,000 மக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளது.[7][26] இந்நிலநடுக்கத்தால் தோராயமாக, 12,000 வீடுகள் அழிக்கப்பட்டும் மற்றும் 15,000 வீடுகள் சேதமடைந்தும் உள்ளன.[27] நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நிவாரண முகாம்களின் மூலமாக 22,000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 52,000 போர்வைகள் வழங்கப்பட்டன.[27] சார்போல்-இ-சகாப்பில் சில குடியிருப்புவாசிகள் அரசின் மோசமான, தரமற்ற கட்டுமானத்தாலும், அரசின் ஊழல் நடவடிக்கைகளுமே இவ்வளவு பரந்துபட்ட சேதத்தை உண்டாக்கியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.[7] பழங்காலத்து கட்டிடங்கள் சேதமடையாமல் நிலைத்திருப்பதும், புதிய கட்டிடங்கள் நிலநடுக்கத்தின் காரணமாக நிலைகுலைந்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.[7] நிவாரண உதவிதுருக்கி அரசானது தனது பேரிடர் மற்றும் நெருக்கடி கால மேலாண்மைக் குழு மூலமாக 92 பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றோர், 4000 கூடாரங்கள், 7000 போர்வைகள் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்த முதல் அரசாகும்.[28] ஐரோப்பிய ஒன்றியம் வெளியுறவுக் கொள்கைத் தலைமை பெடரிக்கா மொகெரினி அவசர கால நிவாரண உதவிகளை வழங்கவும், நிவாரணப் பணிகளில் ஒத்துழைக்கவும் ஒன்றியமானது தயாராக இருப்பதாக அறிவித்தார்.[28] மேலும், இத்தாலிய அரசானது 12 டன்கள் அளவிற்காக கூடாரத் துணிகளையும், போர்வைகள் மற்றும் நடமாடும் சமையலறைகள் ஆகியவற்றை வழங்க உத்தரவு பிறப்பித்தது.[29] சர்வதேச செஞ்சிலுவைச்சங்கமானது பேரிடர் நடந்த நவம்பர் 13ஆம் தேதியன்றே வந்திறங்கினர்.[29] ஈரானிய அழைப்பு மற்றும் சீர்திருத்தக் கழகங்கள் போன்ற சன்னி இசுலாமிய அறக்கட்டளைகள் கூடாரங்கள் மற்றும் குடிநீர் வழங்கின.[7] இதற்கிடையில் இசுரேலின் உதவியை ஈரான் ஏற்க மறுத்தது.[30] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia