இக் கட்டுரை இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை, இணைப்பு, தொனி, வடிவமைப்பு ஆகிய சிக்கல்களைக் கொண்டுள்ளது. நீங்கள் இக்கட்டுரையைத் தொகுத்து உதவலாம்.
மகளிர் அணிவகுப்பு (2017 Women's March)[1][2][3] 2017 சனவரி 21 உலகளவில் நடந்த போராட்டம். அமெரிக்க குடியரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற மறுநாள் அவரின் பல கொள்கைகள் பெண்களுக்கு எதிராகவும் அவர்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது எனக் கருதி இந்த அணிவகுப்பு நடைபெற்றது. [1] இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் போராட்டமாக பார்க்கப்படுகிறது.[4]பெண்களின் உரிமைகள், குடிவரைவு சீர்திருத்தம், சுகாதாரச் சீர்திருத்தம், இனப்பெருக்க உரிமைகள், சுற்றுச்சூழல், நங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகள், இன சமத்துவம், மத சுதந்திரம், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய காரணத்திற்காக இது நடைபெற்றது.[5] பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்ட போது அவா்கள் துணிவுடன் களத்தில் இறங்கிப் போராடினா். போராடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானதால் போராட்டம் பொிதானது. இந்தப் போராட்டதின் அமைப்பாளர்களின் கூற்றுப்படி, "புதிதாகப் பதவியேற்ற அரசிற்கு முதல் நாளில் தைரியமான செய்தியை அனுப்புவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது என்றனா். மேலும், பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகள் தான் என்று உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினோம் என்று கூறினர்". [6]
முக்கிய ஆர்ப்பாட்டம் வாசிங்டன், டிசியில் நடைபெற்றது. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உாிமைகளுக்கான போராட்டம் என்று அறியப்பட்டது. இப்போராட்டம் நியாயமானதாக இருந்ததால் ஆதரவு பெருகியது. உலகெங்கிலும் பல ஊர்வலங்கள் இது தொடர்பாக நடைபெற்றன. வாசிங்டனில் நடைபெற்ற அணிவகுப்பு யூடியூப், முகநூல், எக்ஸ் இல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. [7] இதில் 470,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் நடந்த அணிவகுப்புகளில் 3,267,134 மற்றும் 5,246,670 பேர் பங்கேற்றனர். [8] இது அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 1.0 முதல் 1.6 சதவீதம் பேர் ஆகும். உலகளாவிய பங்கேற்பு ஏழு மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [9] அமெரிக்காவில் குறைந்தது 408 அணிவகுப்புகளும், [9] மற்ற நாடுகளில் 168 அணிவகுப்புகள் நடத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. [10] அணிவகுப்புகளுக்குப் பிறகு, உலகெங்கிலும், ஏழு கண்டங்களிலும், கனடாவில் 29, மெக்சிகோவில் 20, மற்றும் அண்டார்டிகாவில் 1,என மொத்தம் சுமார் 673 அணிவகுப்புகள் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். [11] மக்கள் அமைதியாகத் தங்களது போராட்டங்களை நடத்தினர். டிசி, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரம் அல்லது சியாட்டிலில் அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் யாரும் கைது செய்யப்படவில்லை, அங்கு மொத்தம் இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். "குடிசார் உரிமைகள் இயக்கம் வன்முறையற்ற சித்தாந்தத்தை கடைப்பிடிக்க விரும்புவதாக" இந்த அமைப்பின் இணையதளம் கூறுகிறது. [12]
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2017 மகளிர் அணிவகுப்பு.
அமைப்பாளர்கள்
நவம்பர் 9, 2016 அன்று, அமெரிக்கக் குடியரசுத் தலைவராகடோனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாள், டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் கருத்துக்களுக்கு எதிர்வினையாகவும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இலரியின் தோல்விக்கு ஹவாய் நாட்டைச் சேர்ந்த, தெரசா ஷூக் முகநூல் நிகழ்வை உருவாக்கி, நண்பர்களுடன் வாசிங்டனுக்கு அணிவகுத்துச் சென்று எதிர்ப்பு தெரிவித்தார். எசி ஆர்மன், ஃபான்டைன், ஃபான்டைன் பியர்சன்(ஒரு நியூயார்க் அலங்கார நிபுணர்), ப்ரீன் பட்லர் மற்றும் சிலர் உருவாக்கிய இதே போன்ற முகநூல் பக்கங்கள் ஆயிரக்கணக்கான பெண்கள் விரைவாக அணிவகுப்பில் சேர வழிவகுத்தது. [13] ஹார்மோன், பியர்சன் மற்றும் பட்லர் வாசிங்டனில் உத்தியோகபூர்வ மகளிர் அணிவகுப்பைத் தொடங்கி,ஒருங்கிணைக்க முடிவு செய்தனர்.
↑Emily Tamkin; Robbie Gramer (January 21, 2017). "The Women's March Heard Round the World". Foreign Policy. Archived from the original on January 26, 2017. Retrieved January 25, 2017. The Women's March on Saturday ... grew into a day long international event both in support of women and in opposition to the president's past rhetoric and potential future policies. There were more than 600 events in 60 countries around the world, with millions taking to the streets.
↑"Women's March on Washington". Women's March on Washington. Archived from the original on January 21, 2017. Retrieved January 21, 2017. You can view the program live on a number of Jumbotrons on Independence Ave. and through all of our social media platforms, Facebook, Twitter, and YouTube
↑Schmidt, Kierstein; Almukhtar, Sarah (January 20, 2017), "Where Women's Marches Are", The New York Times, archived from the original on January 21, 2017, retrieved January 21, 2017