2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் மணிப்பூர் சட்டமன்றத்திற்கான 60 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 4 மார்ச் மற்றும் 8 மார்ச் ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற தேர்தலைக் குறிக்கும். இதன் 60 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடநதன.[1] நான்கு சட்டசபை தொகுதிகளில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைந்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.[2]
பின்னணி
முந்தைய சட்டமன்ற பதவிகாலம் 18 மார்ச் 2017 இல் முடிவடைந்தது.[1] முந்தைய தேர்தலில், 2012 நடைபெற்ற காங்கிரஸ் 42 இடங்களில் வெற்றி பெற்றது மற்றும் பதவியில் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.[3] 2014 ஆம் ஆண்டில், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி அதன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.[4]
சோதனை அடிப்படையில் இம்பால் (கிழக்கு), இம்பால் (மேற்கு), பிசுனுபூர், தொபால் ஆகிய நான்கு தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்க காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.[5]
கால அட்டவணை
மணிப்பூர் தேர்தல் வரைபடம். முதல் கட்டம் 38, இரண்டாவது கட்டம் 22
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 24 தொகுதிகளில் போட்டியிட்டது. 2012 தேர்தலில் வென்ற அதன் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் பின்பு காங்கிரசுக்கும் பாசகவிற்கும் சென்று விட்டனர்.[7]
மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்தது என்ற புதிய கட்சியை ஐரோம் சர்மிளா அவர்கள் நிறுவி[8], விசில் சின்னத்தில் இக்கட்சி மூன்று தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிட்டார்.[9]
மணிப்பூர் தேசிய சனநாயக கூட்டணி 15 வேட்பாளர்களை இத்தேர்தலில் நிறுத்தியது.[10]
மார்ச் 4 இல் 38 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.[11] மார்ச் 8இல் 22 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 86 சதவீத வாக்குகள் பதிவானது.[12]
நோட்டா வாக்கு 0.5 சதவீதமாக ஆக இருந்தது.
முடிவுகள்
[உரை] – [தொகு] மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
ஆளுநர் பாசகவை ஆட்சியமைக்க அழைத்து 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க கூறினார்.[13] மணிப்பூர் பாசக முதல்வர் பைரன் சிங் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபித்தார்[14]
↑ 1.01.1"Terms of the Houses". eci.nic.in. Election Commission of India/National Informatics Centre. Archived from the original on பிப்ரவரி 9, 2014. Retrieved May 23, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)