2023 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள்
2023 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள் (2023 National Games of India) இந்தியாவில் நடைபெறும் 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளாகும். கோவா 2023 என்ற பெயரில் இப்போட்டிகள் கோவாவில் நடைபெறுகின்றன. இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 37 ஆவது பதிப்பாக கோவா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.[1][2] 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குசராத்து மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்தது. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று சூரத்தில் நடந்து முடிந்த 2022 இந்திய தேசிய விளையாட்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நிறைவு விழாவில் கோவா ஒலிம்பிக் சங்கத்திற்கு இந்த அனுமதியை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.[3] முன்னதாக கோவா மாநிலத்திற்கு 36ஆவது இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிக ளை நடத்தும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கோவா மாநிலத்தில் கோவிட்-19 அதிகரிப்பு காரணமாக இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகளை நடத்த இயலாது என அறிவித்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia