2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல்
2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Rajasthan legislative assembly election), இராசத்தான் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் டிசம்பர், 2023க்குள் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல் ஆகும்.[2]தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அசோக் கெலட் 2018ம் ஆண்டு முதல் முதலமைச்சராக உள்ளார்.[3] பின்னணிதற்போதைய இராசத்தான் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 14 சனவரி 2024 உடன் முடிவடைகிறது.[4] எனவே டிசம்பர், 2023க்குள் இராசத்தான் சட்டப் பேரவையின் 200 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் அட்டவணை
அரசியல் கட்சிகள் & கூட்டணிகள்இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது.
கருத்துக் கணிப்புகள்1 நவம்பர் 2023 அன்று டைம்ஸ் நவ் பாரத் மற்றும் இடிஜி வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சி 114 முதல் 124; இந்திய தேசிய காங்கிரசு 68 முதல் 78 மற்றும் இதர கட்சிகள் 6 முதல் 10 தொகுதிகளைக் கைப்பற்றும்.[7] தேர்தல் முடிவுகள்இத்தேர்தலில் மொத்தமுள்ள 199 சட்டமன்றத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 115 தொகுதிகளில் வென்று மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.[8][9] கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் பாரதிய ஜனதா கட்சி (41.69%) இந்திய தேசிய காங்கிரசு (39.53%) இராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி (2.39%) பகுஜன் சமாஜ் கட்சி (1.82%) பிறர் (14.57%)
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia