24 (தமிழ்த் திரைப்படம்)
24, இயக்குநர் விக்ரம் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி வேடங்களில் சூர்யா, நித்யா மேனன் , சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. நடிகர்கள்
தயாரிப்புபடத்தின் படப்பிடிப்பு 2015 ஏப்ரல் 9 ஆம் தேதி மும்பையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஏற்பாட்டில் தொடங்கியது.[3] இந்த செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.[4] இப்படத்துக்காக மும்பை, போலந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணினிவரைகலைப் (graphics) பணிகள் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றவிட்டன. ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சூர்யா 3 வேடங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்மாதிரி ஒளிப்படம் மார்ச்சு 4, 2016 அன்று மாலை 6 மணியளவில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[5] வெளியிணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia