4-வினைல்வளையயெக்சீன் (4-Vinylcyclohexene) என்பது C8H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் வளையயெக்சீன் வளையத்தின் 4-நிலையுடன் வினைல் குழு இணைக்கப்பட்டிருக்கும். இது நிறமற்ற ஒரு திரவமாகும். தோற்றுரு கவியா சமச்சீர் என்றாலும் இது முக்கியமாக நடுநிலைச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. 4-வினைல்வளையயெக்சீன் சேர்மம், வினைல்வளையயெக்சீன் ஈராக்சைடு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[4]
தயாரிப்பு
இது டையீல்சு-ஆல்டர் வினையில் பியூட்டா-1,3-டையீனின் இருபடியாதல் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது.[5][4] 1.3 - 100 மெகாபாசுக்கல் அழுத்தத்தில் 110 - 425 ° செல்சியசு வெப்பநிலையில் ஒரு வினையூக்கியின் முன்னிலையில் இவ்வினை நடத்தப்படுகிறது. சிலிக்கான் கார்பைடு மற்றும் தாமிரம் அல்லது குரோமியம் உப்புகளின் கலவையானது இவ்வினையில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1,5-வளைய ஆக்டாடையீன் இங்கு ஒரு போட்டி தயாரிப்பாகும்.
பாதுகாப்பு
மனிதர்களுக்கு புற்று நோயைக் கொடுக்கும் ஒரு வேதிச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[3]